No menu items!

திசை மாறிய நடிகைகள் – திசை மாற்றும் தெலுங்கு இயக்குநர்கள்!

திசை மாறிய நடிகைகள் – திசை மாற்றும் தெலுங்கு இயக்குநர்கள்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டங்களில் சில நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அவர்களில் சிலரை ரசிகர்கள் மறக்காமல் வைத்திருந்து கொண்டாடும் சம்ப்வங்கள் நடக்கின்றன. .

அப்படி தமிழ் ரசிகர்களின் ‘நெஞ்சமெல்லாம் நிறைந்த’ நடிகையாக இப்போதும் இருப்பவர் மந்த்ரா. விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு சத்யராஜ், பிரபு என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முதல் இடத்தில் இருந்தார். அவரது உடல் வாகு தமிழ் ரசிகர்களுக்கு வெகுவாக கவர்ந்திருந்ததால் மந்தராவுக்கென்று ஒரு கூட்டம் தியேட்டரில் விசில் அடிக்கக் காத்துக் கிடந்தது.

தொடர்ந்து பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தபோதே தெலுங்கு சினிமாவிலும் நடிக்க முயற்சி எடுத்தார். இதனால் தமிழில் சில நாட்களில் அவரை பார்க்க முடியாமல் போனது. இனி தமிழில் நடிக்க வரமாட்டார் என்று நினைத்தார்களோ என்னவோ மந்த்ராவை ஒருகட்டத்தில் முழுவதுமாக மறந்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார் மந்த்ரா. அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மந்தரா வெளியிட்ட ஒரு கருத்தால் தெலுங்கு சினிமா உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அவர் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் சரியாக படங்கள் எதுவும் கிடைக்காததால்தான். ஏன் பட வாய்ய்பு கிடைக்கவில்லையென்றால் 2003ம் ஆண்டு அவர் நடித்த தெலுங்கு படம் ஒன்றுதான் தனது மொத்த சினிமா வாழ்க்கையையும் கெடுத்து விட்டது என்கிறார். தெலுங்கில் பிரபல இயக்குனரும் நடிகருமான தேஜா இயக்கிய நிஜம் என்ற திரைப்படம் வெளிவந்தது.

அதில் மந்த்ரா நடித்திருந்தார். கோபிசந்தின் ஆசை நாயகியாக நடித்த அவரை பல கோணங்களில் காட்டி எடுத்திருந்தாராம் தேஜா. இதுதான் தன்னை ரசிகர்கள் மத்தியில் இமேஜ் பாதிப்பை ஏற்படுத்தி மார்க்கெட் இழக்கக் காரணமாக அமைந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

மந்த்ராவிடம் சொன்ன கதை வேறு. படமாக்கிய காட்சிகள் வேறு என்பதே அவருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. படு க்ளாரமராக மந்த்ராவை காட்டியதால் பெரிய ஹீரோக்கள் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க அழைக்கவில்லை. இதனால் அடுத்தடுத்து படங்கள் கிடைக்காமல் ஒதுங்க வேண்டிய நிலை. என்று அவர் வெளியேறிய சூழ்நிலையை தெரிவித்திருக்கிறார்.

இவரைப்போலவே நடிகை ஹனிரோஸ்க்கும் இந்த பிரச்சனை வந்துள்ளது. தமிழில் ஜீவாவுடன் கதாநாயகியாக நடித்தவர். தெலுங்கு படம் ஒன்றில் க்ளாமராக நடித்து விட்டார் அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து க்ளாமர் வேடம் மட்டுமே கிடைத்தது. ஒரு கட்டத்தில் முழு க்ளாமர் ரோலில் நடிக்கத் தொடங்கி விட்டார். கடந்த ஆண்டு வெளியான பாலகிருஷ்ணா படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். இது ஆந்திரா சினிமாவில் வியப்பாக பார்க்கப்பட்டது.

பாலகிருஷ்ணாவுக்கு ஹனி ரோஸ்க்கும் 30 ஆண்டுகள் வயது வித்தியாசம் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. இனிமேல் க்ளாமர் ஆட்டம் அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைத்திருந்த நேரத்தில், ஆனால் அங்கேயும் அப்பா பாலகிருஷ்ணா தனது இளமைக் கால கட்டத்தை நினைத்துப் பார்க்கும் காட்சியில் ஹனி ரோஸ் அதிரடி க்ளாமர் காட்டி அசத்தியிருந்தார். இந்த படத்திற்குப் பிறகு ஹனிரோஸ்க்கு வரிசையாக படங்கள் புக் ஆயின. கடைகள், நிறுவனங்கள் என்று நிறைய திறப்பு விழாக்களில் கலந்து கொண்டார். இதன் பிறகு பாலய்யா ரசிகர்கள் அவரைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இப்படி தெலுங்கு இயக்குனர்களால் ஒரே நாளில் தங்கள் சினிமா வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கண்ட நடிகைகளாக மந்த்ராவும், ஹன் ரோஸும் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...