இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்)வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கமான ஸ்டைலில் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளும் செண்டிமெண்ட் காட்சிகளும் மனதை உலுக்குகின்றன. பாலாவின் படைப்புகளில் மனித நேயத்திற்கும், , சக உயிர்களை நேசிக்க மறந்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை பற்றியும் அதிகமாக பேசப்பட்டிருக்கும். இதிலும் அந்த பாதிப்பு தெரிகிறது.
அவரது ஹீரோக்கள் கடுமையான உழைப்பை படத்தில் செலவிட்டிருப்பார்கள். உடல் ரீதியாக இதற்காக மெனக்கெட்ட அவர்கள் அனுபவத்தையே ஒரு படமாக எடுக்கலாம். அந்தளவுக்கு உயிர்ப்பணயம் வைத்த சம்பவம் கூட இருக்கும். வணங்கான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யாதான். பாலாவின் மாணவரான சூர்யா நந்தா படத்தில் நடித்த காலகட்டம் அவருக்கு பெரிய வியாபாரம் இல்லை. இது குறித்து இயக்குனர் பாலா ஒரு பத்திரிகை பேட்டியில் கூறும்போது இன்னும் சில வருடங்களில் சூர்யாவின் கால்ஷீட் கிடைக்காமல் அலைவார்கள் என்று போகிற போக்கில் பேசியிருந்தார். அது அப்படியே உண்மையானது.
ஆனால் சூர்யாவை வளர்த்து விட்ட தனக்கே அவர் கால் ஷீட் கிடைக்காமல் போகும் என்று பாலா நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். வணங்கான் தொடங்கப்பட்டதே பெரிய கதை. பாலாவின் முந்தைய படங்கள் சில பெரிய வசூல் செய்யுவில்லை. இதனால் அவருக்கு அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை. இதனால் மூன்று வருடங்களாக எந்த படமும் இயக்காமல் அமைதியாக இருந்தார் பாலா. கூடவே சொந்த வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் சிலவும் அவரை அப்படியே முடக்கிப் போட்டது. நண்பர்கள் பலரையும் சந்திப்பதை தவிர்த்து தனிமையில் வாழ்த்தொடங்கினார் மனிதர்.
இதனால் அவரை இந்த சூழலிலிருந்தௌ மீட்டுக் கொண்டுவர சிஷ்யன் என்கிற முறையில் அக்கறை எடுத்துக் கொள்ள நினைத்தார் சூர்யா. ஆனால் யானை வீழந்தாலும் குதிரை மட்டம் என்பது போல், அவரை பக்குவமாக அணுகி, தன் கம்பெனி சார்பில் ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும், அதனை தாங்கள் இயக்க வேண்டும் என்றும் சொல்லி பாலாவை தயார்படுத்தியிருக்கிறார் சூர்யா.
அவரை மனநீதியாக எந்தவகையிலும் நோகடிக்காமல் கவனமாக கையாண்டார். சூர்யா. ஒரு வழியாக வணங்கான் கதையைச் சொன்னார். சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சூர்யாவுக்கு வரிசையாக படங்கள் காத்திருக்க, இதை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆசைப்பட்டார் சூர்யா. இதற்கு பாலாவும் சம்மதித்து கன்னியாகுமரி பகுதியில் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.
சூர்யா வெற்றி,மாறன் படமான வாடிவாசல் படத்தில் நடிப்பதற்காக ஒரு காளை மாட்டை வளர்த்துக் கொண்டிருந்தார். கன்று வயதிலிருந்து வளர்த்தால்தான் அது படத்தில் பாசத்தோடு பழகும் காட்சி ரியலாக வரும் என்று இந்த ஏற்பாடு. அதையும் வணக்கான் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச்சென்று தினமும் தீவனம் வைத்து வளர்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பாலா ஒருநாள், என் படத்திற்கு வந்து விட்டு, இன்னொரு படத்தின் வேலையை செய்வதா என்று கடிந்து கொண்டதாக கூறப்படுறது. அங்கிருந்து தொடங்கிய மோதல் மொத்த தயாரிப்பிலிருந்தும் சூர்யா விலகிக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டது.
பல சிக்கல்களைத்தாண்டி வி ஹவுஸ் சார்பில் சுரேஷ் காமட்சி வணங்கான் படத்தைக் கையிலெடுத்தார். சூர்யா நடித்த வரைக்கும் இருந்த காட்சிகளை அப்படியே தூக்கி வைத்து விட்டு நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைத்து முடித்திருக்கிறார் பாலா. அருண் விஜய்யும் பெரிய அங்கீகாரத்திற்காக காத்திருந்தார். கடும் உழைப்பாளியான அவர் தன்னை பாலாவிடம் ஒப்படைத்தார். இப்போது ட்ரைலைப் பார்க்கும்போது அருண் விஜய்யின் அபார உழைப்பு கண் முன் தெரிகிறது. இது அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்பபதை ட்ரைலரே சொல்கிறது,
தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படியோ படைப்பைப் பொருத்தவரைக்கு பாலா யாருக்கும் வணங்கான் தான்.