ஜெயிலர் படத்தில் நடித்தப் பிறகு இந்திய அளவில் செல்வாக்குமிக்க நடிகையாக மாறியிருக்கிறார் தமன்னா. அவரது க்ளாமர் தோற்றமும் கிறங்க வைக்கும் அழகும் இணையத்தில் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அவருக்கு பெற்று தந்திருகிறது.
இந்த நேரத்தில் அவர் இந்தி படங்களில் நடிக்க தனது சம்பளத்தை அதிகபடுத்தியிருக்கிறார். ஆனாலும் தென்னிந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். சில மாதங்களுக்கு வெளியான அரண்மனை 4 படத்தில் பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
தமன்னாவுக்காக படம் ஓடும் நிலை உருவாகத் தொடங்கியிருக்கிறது.இந்த நேரத்தில் அவருக்கு இன்னொரு சிக்கல் வந்திருக்கிறது. பள்ளி ஒன்றின் பாடப்புத்தகத்தில் தமன்னாவை பற்றிய தகவல்கள் இருந்ததால் பெற்றோர்கள் பள்ளிக்கு எதிராக கொதித்தெழுந்திருகிறார்கள்.
பெங்களூரிவில் இருக்கும் ஒரு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. சிந்த் – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த சம்பவங்களை விவரிக்கும் இடத்தில் தமன்னாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் கோபமடைந்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கு எதிராக கொதித்தெழுந்திருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் இந்த வயதில் தமன்னாவைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு பள்ளிக்கு சென்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாக படிக்கும் வயதில் சினிமா பார்ப்பதும், நடிகைகளின் போட்டொக்களை புத்தகங்களில் ஒட்டுவதும் படிப்பவர்களுக்கு மனதை சிதற வைக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் என்பதால் இதத்தவிர்ப்பது அவசியம். சில நிறுவங்கள் அச்சிடும் நோட்டுகளின் அட்டைப் படங்களில் நடிகர், நடிகைகளைன் படங்கள் இருந்தது சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு நோட்டுகளில் இனி விளையாட்டு வீரர்களின் படங்களும், விஞ்ஞானிகளின் படங்களும் இருக்க வேண்டும் என்பதை பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவாகவே போடப்பட்டது. இப்போது அதுவே நடைமுறயாக இருந்து வருகிறது.
இதே போல சென்னை அண்ணாநகர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து கவிதை ஒன்றை பாடத்திட்டத்தில் வைத்திருந்தார்கள். இது வாழ்க்கை நெறி ஒழுக்கத்தை போதிக்கக்கூடிய ஒரு பகுதி அதில் இல்லறம் பற்றி பேசிய வைரமுத்துவின் கவிதையை வைத்திருந்தார்கள். அந்த கவிதை
நடிகை வீட்டுக்கு
கண்ணகி இல்லம் என்று
பெயர் வைத்தது போல
என்று முடிந்திருக்கும் இந்த பாடத்திற்கு கல்லூரியில் இருந்த சில பேராசிரியர்களே எதிர்ப்பை தெரிவித்தனர். இப்படி பள்ளி கல்லூரிகளில் திரைப்பட நடிகர், நடிகைகளின் தாக்கம் அதிகம் இருப்பது இன்ரு நேற்றல்ல பல ஆண்டுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தற்போது தமன்னா வரைக்கும் வந்திருப்பதுதான் இதன் தொடர் நிகழ்வாக இருக்கிறது.
இது மாற்றப்பட வேண்டும். உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?