ஒரே ஒரு ஹிட்டுக்காக நீண்ட காலம் பார்த்திருக்கும் விக்ரம், ‘தங்கலான்’ படத்தை ரொம்பவே நம்பி இருக்கிறார். இப்போது அந்தப் படத்தின் போஸ் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் ’வீர தீர சூரன்’ படத்தின் சூட்டிங்கில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடந்து கொண்டிருக்கிறது. எஸ்.யூ. அருண் குமார் இப்படத்தை இயக்குகிறார். தங்கலான் இல்லாவிட்டால், இந்த படமாவது தனக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருப்பதாக விக்ரமிற்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
’பரோட்டா’ சூரி இப்போது ‘கருடா’ சூரி
’பரோட்டா’ சூரி இப்போது ’கருடா’ சூரியாக ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். ஒரே காரணம் இந்த வருடத்தில் அதிக வசூலித்த படங்களின் பட்டியலில் சூரியின் ’கருடன்’ படமும் இடம்பிடித்திருக்கிறது. 50 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது சூரியை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அமேசான் பிரைம் இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கி இருப்பதால், சூரியின் மார்க்கெட் உயர்ந்து இருப்பதாக அவரது தரப்பில் நினைக்கிறார்கள்.
சூர்யா இல்லைன்னா சிம்பு – சுதா கொங்கரா
‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுதா கொங்குராவும் சூர்யாவும் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்பட்டது. இந்த ப்ராஜெக்ட்டுக்கு ‘புற நானூறு’ என்றும் பெயர் வைத்து இருந்தார்கள். இந்த படத்தின் கதை தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக கொண்ட களமாக இருக்குமாம். இதனால் கதை, திரைக்கதையைப் பற்றிய சில சலசலப்புகள் சுதாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே எழுந்ததால், சூர்யா அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார் என கிசுகிசு ஒன்று இருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் 50-வது படத்தை சுதா கொங்கரா இயக்கப் போவதாகவும், இது ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என்றும் இது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கணவரால் பெரும் சிக்கலில் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் தான் பாலிவுட் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே பெரும் சிக்கலுக்குள் மாட்டி கொண்டு தவிக்கிறார்கள்.
அப்படி என்னதான் பிரச்சினை?
ரகுல் பிரீத் சிங்கின் மாமனார் வாசு பாக்னானி பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர். இவரது தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பெரும் பட்ஜெட்டிலான படங்களை தயாரித்த நிறுவனம். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் படங்களை தொடர்ந்து எடுத்துவந்த நிறுவனம் பூஜா எண்டர்டெயின்மெண்ட்.
சமீபத்தில் வாசு பாக்னானி எடுத்த ’கண்பத்’, ‘படே மியான் சோட்டே மியான்’, ‘பெல் பாட்டம்’ என எந்த படமும் ஓடவில்லை. பெரிய வசூலை ஈட்டவும் இல்லை. இதில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப்பை வைத்து எடுத்த படே மியான் சோட்டே மியான்’ பட்ஜெட் சுமார் 300 கோடிகளாம். ஆனால் இந்தப் படம் வெறும் 60 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறதாம். இதனால் ஒரே படத்தின் மூலம் 240 கோடி நஷ்டம்.
பாலிவுட் பொருத்தவரை ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டால் ஷூட்டிங் முடிந்த 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் இந்த படத்தில் வேலை பார்த்த தொழில் நுட்ப வல்லுனர்கள் உட்பட பலருக்கு இன்னும் சம்பளம் பாக்கி இருக்கிறதாம். இது குறித்து சமூக ஊடகங்களில் எங்களுக்கு சம்பளம் தரவில்லை என்று ஆளாளுக்கு தங்களது வலியை பதிவு செய்து வருகிறார்கள்.
அதேநேரம் மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகுல் ப்ரீத் சிங் மாமனார் சேர்ந்து தயாரித்த படங்களும் பாக்ஸ் ஆபீஸில் காலை வாரிவிட்டன. இதனால் நிதி பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் ரகுலின் காதல் கணவரும் மாமனாரும்.
கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க, மும்பையில் ஏறக்குறைய 250 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது அலுவலகத்தை இப்பொழுது வாசு பாக்னானி விற்றுவிட்டார். இப்போது ரகுல் பிரீத் சிங்கின் காதல் கணவர் ஜாக்கி பாக்னானி மற்றும் அவரது அப்பா வாசு பாக்னானி இருவதும் இரண்டு பெட்ரூம் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தங்களது அலுவலகத்தை நடத்தி வருகிறார்கள்.
இதனால் ரகுல் ப்ரீத் சிங் பெரும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.