சென்னை கோயம்பேடு சந்தையில் பல்வேறு காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ பீன்ஸின் விலை ரூ.200, பூண்டின் விலை ரூ.250 என்று சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
கோடை வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளன.
கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ பீன்ஸின் விலை 200-க இருந்தது. ஒரு கிலோ பூண்டு ரூ.250-க்கு விற்கப்பட்டது எலுமிச்சம்பழம் கிலோ 190-க்கும், வெங்காயம் கிலோ 30-க்கும், பீன்ஸ் ₹50லிருந்து ₹180க்கும் பீட்ரூட் ₹25லிருந்து ₹50க்கும், முள்ளங்கி ₹15லிருந்து ₹30க்கும், சவ்சவ் ₹30லிருந்து ₹50க்கும், முட்டைகோஸ் ₹15லிருந்து ₹30-க்கும் விற்கப்பட்டது.
இந்த திடீர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மீன்பிடி தடைக்காலத்தால் ஏற்கெனவே மீன்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இப்போது காய்கறிகளின் விலையும் உயர்ந்திருப்பது மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் பற்றி கூறிய கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார், “வரத்து குறைவு மற்றும் வெயிலின் தாக்கத்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ், பூண்டு, எலுமிச்சம்பழம் உட்பட அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்து விற்பனையானது. வெயிலின் தாக்கம் குறைய இப்போதைக்கு வாஅய்ப்பு இல்லாததால் காய்கறிகளின் விலை உயர்வு இம்மாதம் முழுவதும் நீடிக்கும்” என்றார்.