தோனியின் சமூகவலைதள பக்கத்தில் இருந்து சமீபத்தில் வந்த ஒரு வேண்டுகோள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. mahi77i2 என்ற ஹேண்டிலில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தோனியின் படத்துடன் கூடிய அந்த ஹேண்டிலில், “ஹாய்… நான் தோனி. என் தனிப்பட்ட அக்கவுண்டில் இருந்து இந்த செய்தியை அனுப்புகிறேன். நான் இப்போது ராஞ்சி புறநகர் பகுதியில் இருக்கிறேன். நான் என்னுடைய பர்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன். எனக்கு 600 ரூபாயை போன்பே மூலம் அனுப்பினால் பஸ் பிடித்து வீட்டுக்கு போக உதவியாக இருக்கும். வீட்டுக்கு போனதும் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன்” என்று அவர் உதவி கேட்பதாய் அந்த பதிவு இருக்கிறது.
இன்ஸ்டா பக்கத்தில் வெளியான இந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் எக்ஸ் சமூக வலைதளங்களிலும் வெளியாகி இருக்கின்றன. எக்ஸ் வலைதளத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பதிவை பார்த்திருக்கிறார்கள். இதைப் பார்த்த சிலர் தோனிக்கு இப்படி ஒரு நிலையா என்று கவலைப்பட்டுள்ளனர்.
ஒரு சிலர் அவரைக் கிண்டலிடித்தும் கமெண்ட்களை அடித்துள்ளனர். அதில் ஒருவர் 2050-ம் ஆண்டுவரை ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதாக உறுதி அளித்தால் பணம் அனுப்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்., ஆனால் யாரும் பணம் அனுப்பினார்களா என்று தெரியவில்லை.
இந்த சூழலில் தோனியின் பெயரில் இருந்து பனம் கேட்டு பதிவுகள் வந்தால், அதை நம்பி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்றும், அது தோனியின் கணக்கு அல்ல… போலியான கணக்கு என்றும் தகவல் தொடர்புத் துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.