96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று நடைபெற்றது இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றது. இப்படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக போட்டியிட்டது.
அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார். ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது.
ஆஸ்கர் விருதுகளில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘பார்பி’ திரைப்படம் ஒரு விருதை மட்டுமே வாங்கியது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை இப்படத்தின் ‘வாட் வாஸ் ஐ மேட் ஃபார்?’ வென்றது.
சிறந்த நடிகருக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் படத்துக்காக சிலியம் மர்ஃபி வெல்ல, சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் பெற்றார். புவர் திங்ஸ் அன்ற பட்த்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் இந்த விருதைப் பெற்றார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் பட்டியல்…