ஆசைகாட்டி, காக்க வைத்து கமல் கண்டுகொள்ளாமல் கைவிட்ட ஹெச். வினோத்துடன் பட்டென்று ஒட்டிக்கொண்டிருக்கிறார் தனுஷ்.
கமலுடன் படம் என்றதால் சில மாதங்கள் ஒன்றும் செய்ய முடியாமல், விலகவும் முடியாமல் தவித்த ஹெச். வினோத், இப்போதுதான் கமல் வட்டாரத்திலிருந்து வெளிவந்திருக்கிறார்.
அடுத்து யாருடன் சேர்ந்து படம் பண்ணலாம் என்று யோசித்தபோதுதான் தனுஷூடன் படம் பண்ணும் யோசனை வந்திருக்கிறது.
தனுஷின் 50-வது படத்தை, அவரே இயக்கி நடிக்கிறார். இப்பட்த்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளி வரும் வகையில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு அடுத்து, இப்போது தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் நாகார்ஜூனாவும் நடிக்கிறார். இந்தப் படம் மூலம் தெலுங்கில் தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைக்க தனுஷ் முயற்சித்து வருகிறார்.
இதற்கு அடுத்துதான் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். விஜயின் ’லியோ’ படத்தைத் தயாரித்த செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார், ஹெச்.வினோத் – தனுஷ் கூட்டணியில் படம் தயாரிக்க முன்வந்திருக்கிறார்.
இதனால் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கின்றன. எல்லாம் ஒரு வழியாக முடிவாகிவிட, ஒரேயொரு விஷயம் மட்டும் இழுத்துக்கொண்டே இருக்கிறதாம். அது தனுஷின் சம்பளம்.
இதுவரையில் தனுஷ் வாங்கிய அதிகப்பட்ச சம்பளம் 25 கோடிதான் என்கிறார்கள். இதனால் ஹெச்.வினோத் உடனான பட த்திற்கு 27 கோடி சம்பளமாக கேட்பார் என லலித் குமார் எதிர்பார்த்தாராம். இரண்டு அல்லது 3 கோடி அதிகம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் தனுஷ் எடுத்த எடுப்பிலேயே 45 கோடி சம்பளம் என்று சொல்ல அதிர்ந்துப் போயிருக்கிறார்கள். ஹெச்.வினோத்தும் நானும் இணைந்தால், வியாபாரம் பெரிதாக இருக்கும். அதனால் இந்த சம்பளம்தான் சரியாக இருக்கும் என தனுஷ் சொன்னாராம்.
இருந்தாலும், லாபம் இல்லாமல் போய்விடும் என்று சொன்ன தயாரிப்பாளர் கொஞ்சம் கொஞ்சமாக பேசியிருக்கிறார். கடைசியில் சந்தையில் துண்டைப் போட்டு வியாபாரம் பேசுவது போல் பேசி, உனக்கு சாதகம் எனக்கு பாதகம் இருந்தாலும் பரவாயில்லை என 35 கோடிக்கு பேசி முடித்திருக்கிறார்களாம்.