No menu items!

சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு

சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் சைதை துரைசாமி. எம்ஜிஆரின் அபிமானி. மனிதநேயம் ஐஏஎஸ் அகாதமி என்ற அமைப்பை சைதை துரைசாமி நடத்தி வருகிறார். இந்த அகாதமி மூலம் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சிகளை கொடுத்துள்ளார்.

சைதை துரைசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர். வெற்றி துரைசாமி, தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்து வந்தார். இவர் ஒரு திரைப்பட இயக்குநரும்கூட. நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பராகவும் வெற்றி உள்ளார். 45 வயதான வெற்றி சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த 4-ம் தேதியன்று தனது நண்பர்களுடன் இமாச்சசலப் பிரதேசத்துக்கு வெற்றி துரைசாமி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, அவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது.

அந்த காரின் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். காரில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. இதையடுத்து அவரைத் தேடும் பணி கடந்த 8 நாட்களாக நடந்து வந்தது. இமாச்சல் பிரதேச போலீஸார் வெற்றியை தேடி வந்தனர்.

வெற்றி துரைசாமியின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ரன.

மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியான நிலையில், வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சலப் பிரதேசம் செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உடற்கூராய்வுக்குப் பின்னர், வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...