கமல் விக்ரம் வெற்றிக்குப் பிறகு ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என ஜூலை 2023-ல் அறிவிப்பு வெளியானதுமே தமிழ்சினிமாவில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆனால் இப்போது ஜனவரி 2024 ஆகிறது. இதுவரையில் ஹெச்.வினோத் – கமல் கூட்டணி நடக்குமா இல்லை பேச்சுவாக்கில் மட்டுமே இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஒரே காரணம், ஹெச். வினோத் உடன் சேர்ந்து ரவுண்ட்ஸ் அடித்த கமல், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை அப்படியே விட்டுவிட்டு தனது மாப்பிள்ளை மணிரத்னமுடன் கைக்கோர்த்திருக்கிறார். இந்த இருவரும் சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். இதனால் ஹெச்.வினோத் பற்றி யாரும் பேசவும் இல்லை. அவருக்காக வருத்தப்படவும் இல்லை.
மறுப்பக்கம் ஹெச். வினோத், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போகிறார் என்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
ஆனால் கார்த்தியும் ‘சர்தார் 2’, அடுத்து ‘கைதி 2’ என்று அடுத்தடுத்தப் படங்களை வரிசைப்படுத்திவிட்டார். இதனால் கார்த்தியுடன் இணையும் வாய்ப்பும் ஹெச். வினோத்திற்கு இல்லாமல் போய்விட்டது.
யார் இருந்தால் என்ன.. யார் போனால் என்ன.. ஒரு படைப்பாளியின் வேகத்தை யாராலும் தடுக்க முடியாது. கதைதான் நாயகன். ஒரு நல்ல கதைக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்தால் அந்த வெற்றி பலமடங்கு அதிகமாகும். கதைக்கு நாயகன் கிடைக்காவிட்டாலும் அது வெற்றி பெறும்.
இந்த விஷயத்தில் ரொம்பவே தெளிவாக இருக்கும் ஹெச். வினோத், பட்டென்று ஒரு முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார்கள். ‘சதுரங்க வேட்டை’ படம் கதாநாயகனை நம்பி எடுக்கப்பட்ட படம் இல்லை. அதேபோல் மீண்டும் களத்தில் இறங்கினால் என்ன என்று ஹெச்.வினோத் யோசிக்கிறாராம்.
ஒரு அரசியல் நையாண்டி கதை அவர் கைவசம் இருப்பதாகவும், அந்த கதைக்கு யோகிபாபுவை வைத்து ஜெயித்து காட்டவும் முடிவு செய்திருக்கிறாராம். எந்த ஹீரோ இல்லை என்றாலும், ஒரு காமெடியனை வைத்து ஜெயித்து காட்டுகிறேன் என ஹெச். வினோத் யோசித்து வருவதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பேச்சு.
முதல் பட ஹீரோவை மறக்காத சமந்தா
சமந்தாவை குட்டி நயன்தாரா என்று கூட சொல்லலாம்..
அந்தளவிற்கு நயன்தாராவை மாதிரியே காதல், திருமணம் இப்படி பல விஷயங்களில் சர்ச்சைகளில் அதிகம் சிக்கியவர். ஒரேயொரு வித்தியாசம் முதலாமவர் காதலில் சர்ச்சையாகி திருமணம் செய்து கொண்டவர். அடுத்தவர் காதல் விழுந்து திருமண சர்ச்சையில் சிக்கியவர்.
ஒரு வழியாக தனது காதல் கணவர் நாக சைதன்யா மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்களில் ஒன்றான அக்கினேனி குடும்ப உறவிலிருந்து விடுப்பட்டிருக்கிறார். திருமண உறவின் முறிவின் போது இவர் அந்த குடும்பத்தில் இருந்து எந்தவிதமான பணமும் ஜீவனாம்சமாக வாங்க வில்லை என்கிறார்கள்.
இதனால் இப்போது தன்னுடைய சுய முயற்சியினால் முன்னேற துடிக்கும் சமந்தாவுக்கு அடுத்த அடியாக ஆட்டோஇம்யூன் பிரச்சினையான மையோசிடிஸ் வந்தது. இப்பொழுது அதிலிருந்தும் ஓரளவிற்கு மீண்டுவிட்டார்.
இதற்கு பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் பெரிதாக எதுவும் வரவில்லை. இதனால் திரைப்படங்கள், வெப் சிரீஸ் தயாரிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. இதை செயல்படுத்த, ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் சமீபத்தில் ஆரம்பித்துவிட்டார். அந்த நிறுவனத்தின் பெயர் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ். [Tralala Moving Pictures].
தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புகழ்பெற்ற தமிழ் மியூசிக் டிவியின் ஷோ ஒன்றை தயாரிக்க இருக்கிறாராம். இது இங்கிருந்து தெலுங்குக்கு எடுக்கப்பட இருக்கிறதாம்.
மறுபக்கம் திரைப்படம் ஒன்றையும் சமந்தா தயாரிக்க தயாராகி இருக்கிறாராம். இந்தப் படத்தை இயக்கப் போவது சமந்தா முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமான ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராகுல் ரவீந்திரன்.
இந்த ராகுல் ரவீந்திரன் வேறு யாருமல்ல, வைரமுத்து மீது ‘#metoo சர்ச்சையைக் கிளப்பிய பின்னணி பாடகி சின்மயிதான்.