தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீண்டும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ள தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.01.2024 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து 02.01.2024 அன்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.01.2024 அன்று தென்தமிழகத்தில் இந்த மழை குறையத் தொடங்கும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, “இன்று (30.12.2023) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா. தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (31.12.2023) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.