கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவடா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் ஹனீஷ் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போய்விட்டான்.
அவனை எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறார்கள். ஆனால் பையன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஹனீஷை ஒரு பெண்ணும் ஆணும் இரு சக்கர வாகனத்தில அழைத்து சென்றதாக தகவல் வந்திருக்கிறது. ரேகா என்ற அந்தப் பெண் இவர்கள் வீட்டருகில் வசிப்பவர்தான்.
சிறுவனை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிப்பதற்காக, ரேகாவும், ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் அருகே காம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரவணய்யா, 50 என்பவரும் ரேகாவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
போகிற வழியில் ஒரு ஆட்டோவுடன் இவர்களது வாகனம் மோதிவிட்டது. ஆட்டோ ஓட்டுநருடன் சண்டை போட்டிருக்கிறார்கள். இதை உள்ளூர் இளைஞர்கள் கவனித்திருக்கிறார்கள். சிறுவனைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அதற்கு ரேகா, சிறுவனை பெற்றோர் கூட்டி வரச் சொன்னார்கள் என்று பதிலளித்திருக்கிறார். ஆட்டோ டிரைவர்டன் நடந்த சண்டையில் கூட்ட கூடவே சிறுவனை அழைத்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள்.
போகிற வழியில் சிறுவனுக்கு சந்தேகம் வந்து கூச்சல் போட்டிருக்கிறான். அவனை இவர்களால் அடக்க முடியவில்லை. அதனால் சிறுவனை கழுத்தை இறுக்கி கொன்று கழுத்தையும் வெட்டியிருக்கிறார்கள். பிறகு ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சாலையோ புதரில் போட்டுவிட்டு போய்விட்டார்கள்.
இதற்கிடையே சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தேடுவதாக சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்த நாள் ஒன்று தெரியாதது போல் ஊருக்குள் ரேகா வந்திருக்கிறார். உடனே அவனை ஊர் மக்கள் வளைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
சிறுவனை எதற்காக கடத்தினார்கள் என்ற விவரம் இதுவரை வெளியில் தெரியவில்லை.
நரபலி கொடுப்பதற்காக கடத்தியிருக்கிறார்கள் என்று ஊர் மக்கள் சிலர் சொல்லுகிறார்கள்.
ஆனால் ரேகாவும் அவரது கூட்டாளியும் சிறுவர்களை கடத்தி விற்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடத்தப்படும் சிறுவர்களை ஆந்திராவிலும் மகாராஷ்ட்ராவிலும் விற்றுவிடுவார்களாம். அந்த சிறுவர்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவார்களாம்.
சிறுவனைக் கடத்திய அவர்கள் பெற்றொரிடமிருந்து பணம் பறிக்க என்ற தகவலும் இருக்கிறது.