சினிமாவில் குறிப்பாக நடிகைகள் விஷயத்தில் ஒரு சிலருக்குதான் திருமணத்திற்கு பிறகான அவர்களது ரீ-எண்ட்ரீ சூப்பர் டூப்பர் எண்ட்ரீ ஆகியிருக்கிறது.
அந்த மாதிரியான உற்சாகத்தில் இருக்கிறார் காஜல் அகர்வால். வாய்ப்புகள் வராமல் போகவே புத்திசாலித்தனமாக திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். ஆனாலும் ‘இந்தியன் 2’ படம் அவரை மீண்டும் கேமராவுக்கு முன் நிற்கும் ஆசையைத் தூண்டிவிட்டது.
இதனால் குழந்தையைப் பார்த்து கொள்ள தனது அம்மாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துவந்து, நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
காஜல் அகர்வால் மிகவும் பரபரப்பாக நடித்து கொண்டிருந்த காலத்தில் கூட ஒரு கோடி முதல் 1.5 கோடி வரைதான் சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் திருமணமாகி ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் இப்போது சம்பளமாக 2.25 கோடி கேட்கிறாராம். இதுதான் இவரது சினிமா வாழ்க்கையில் வாங்கிய அதிக சம்பளம்.
திருமணம் ஆனால் என்ன கவர்ச்சியாக நடிப்பதில் என்ன தவறு? இப்போது பாலிவுட்டில் திபீகா படுகோன், ஆலியா பட் நடிப்பது போல் கவர்ச்சியில் இறங்கவும் தயார் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் களத்தில் இறங்கி இருக்கிறார். இதற்கு பலனாகதான் இப்போது சம்பளம் எகிறியிருக்கிறதாம்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள்
’2023-ல் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்’ பற்றிய பட்டியலை கூகுள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டை விட, இந்த முறை இந்திய திரைப்படங்களில் தமிழ்ப்படங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.
ஷாரூக்கானின் இரண்டுப் படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றனா. அட்லீ இயக்கிய ‘ஜவான்’ 2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படமாக முதலிடம் பிடித்திருக்கிறது. இவரது மற்றொரு படமான ‘பதான்’, 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் பெரும் வெற்றியைப் பெற்ற பாலிவுட்டின் சன்னி தியோல் நடித்த ‘கடார் 2’ இரண்டாமிடத்தைப் பெற்றிருக்கிறது.
கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் மூன்றாவது இடத்தைப் பெற்று ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
ராமாயணத்தை வைத்து எடுக்கப்பட்டு, பெரும் கமெண்ட் சர்ச்சையில் சிக்கிய ‘ஆதிபுரூஷ்’ திரைப்படம், இப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை, சர்ச்சையை உருவாக்கிய மலையாள திரைப்படமான ‘த கேரளா ஸ்டோரி’ ஆறாவது அதிகம் தேடப்பட்ட படமாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்திற்கு அஸ்திவாரமிட்ட ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம், ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ரஜினிக்கு அடுத்தப்படியாக, இந்தாண்டில் வெளியான விஜயின் இரண்டுப் படங்களும் அதிகம் தேடப்பட்ட திரைப்பட பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் லியோ எட்டாவது இடத்தையும், வாரிசு ஒன்பதாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன.
இறுதியாக பத்தாவது இடத்தில் சல்மான் கான் நடித்த டைகர் 3 படம் தேர்வாகி இருக்கிறது.