ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஞ்சயன், இளவரசு உள்ளிட்டோர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
மதுரையில் அரசியல் செல்வாக்கு பெற்ற ரவுடி ராகவா லாரன்ஸ். அவரால் பாதிக்கப்படும் ஒரு ஹீரோ, ராகவா லாரன்ஸை கொல்ல திட்டமிடுகிறார். ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மெஸ்.ஜே.சூர்யாவிடம் அவரை கொல்லும் வேலை தரப்படுகிறது. ராகவா லாரன்ஸ் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க விரும்புவதை அறிந்த எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் என்ற போர்வையில் அவரிடம் செல்கிறார். படம் எடுப்பதாக கூறி ராகவா லாரன்ஸுடன் பழகி அவரைக் கொல்வது எஸ்.ஜே.சூர்யாவின் திட்டம். அவரின் திட்டம் பலித்ததா? ராகவா லாரன்ஸை அவர் கொன்றாரா என்ற ரூட்டில் முதல் பாதி படம் செல்கிறது.
ஆனால் இரண்டாவது பாதியில் வேறு ரூட்டில் பயணிக்கிறது கதை. காப்ரேட்களுக்காக காடுகளையும், விலங்குகளையும் அழிக்கும் அரசுக்கு எதிரான பழங்குடிகளின் போராட்டத்தை மையப்படுத்தி இரண்டாம் பாதி கதை செல்கிறது. இதில் அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார் ராகவா லாரன்ஸ். அந்த போராட்டத்தில் அவர் ஜெயித்தாரா? ராகவா லரன்ஸைக் கொல்ல வந்த எஸ்.ஜே.சூர்யா என்ன ஆனார் என்ற ரூட்டில் கதை செல்கிறது.
ஆரம்பத்தில் நகைச்சுவையாக செல்லும் படம், கடைசி 20 நிமிடங்களில் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
Garudan (கருடன் – மலையாளம்) – அமேசான் ப்ரைம்
பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படங்களை தருவதில் மலையாள திரையுலகம் என்றும் முன்னணியில் இருந்திருக்கிறது. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் கருடன்.
ஒரு மழை நாளில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார். இதில் அந்த மாணவி கோமா நிலைக்கு செல்ல, வழக்கை விசாரிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரியான சுரேஷ் கோபிக்கு வருகிறது. மாணவியை பாலியல் வன்புணர்வு செய்தது பிஜு மேனன் என்று கண்டுபிடிக்கும் சுரேஷ் கோபி, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்.
7 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளியில் வரும் பிஜு மேனன். அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கச் சொல்லி வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வருகிறது. தவறான நபரை கைது செய்த்தாக சொல்லி சுரேஷ் கோபிக்கு கோர்ட் அபராதம் விதிக்கிறது. மக்கள் மத்தியில் அவரது இமேஜ் பாதிக்கப்படுகிறது. ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ளாத சுரேஷ் கோபி, பிஜு மேனன்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க மீண்டும் ஒருமுறை அந்த வழக்கை விசாரிக்கிறார். அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.
பரபரப்பான த்ரில்லர் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது.
சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai – இந்தி) – ஜீ5
வட இந்தியாவில் புகழ்பெற்ற சாமியாராக இருந்த ஆசாராம் பாபு மீது கடந்த 2013-ம் ஆண்டில் பாலியல் புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆதரவாக பல புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் சாதாரணமான ஒரு உள்ளூர் வக்கீல் அவற்றையெல்லாம் முறியடித்து ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தார்.
அந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்தான் சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை. இதில் சாமியாருக்கு தண்டனை வாங்கித் தரும் சாதாரண வக்கீலாக மனோஜ் வாஜ்பாய் நடித்துள்ளார்.
கோர்ட் சீன்களை அதிகமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
ஆசாராம் பாபு விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.
800 (தமிழ்) – ஜியோ மூவிஸ்
இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை (800) வீழ்த்திய வீரனாக உயர்ந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதைதான் 800.