No menu items!

இனிமேல் அதை பண்ண முடியாது! – கிரிக்கெட் புது ரூல்

இனிமேல் அதை பண்ண முடியாது! – கிரிக்கெட் புது ரூல்

கிரிக்கெட் விளையாட்டில் புதிய அம்சமாக ஸ்டாப் க்ளாக் வந்திருக்கிறது. இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அம்பயரிங் செய்யும் நடுவர்கள் பந்துவீச்சாளரின் தொப்பி, ஸ்வெட்டருடன் சேர்த்து கையில் ஒரு ஸ்டாப் க்ளாக்கையும் வைத்திருப்பதை பார்க்கலாம்.

எதற்காக ஸ்டாப் க்ளாக்:

கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்தை குறைக்கும் விஷயங்களில் ஒன்று காலதாமதம்.  போட்டி பரபரப்பாக நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் பீல்டிங் செய்யும் அணியின் கேப்டன், பந்துவீச்சாளருடன் பேசுகிறேன், பீல்டிங் செட் செய்கிறேன் என்ற பெயரில் ஏராளமான நேரத்தை எடுத்துக்கொள்வது வழக்கம். அப்படி அவர்கள் ஏராளமான நேரத்தை எடுத்துக் கொள்வதால், ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைவதுடன், பேட்ஸ்மேனின் கவனமும் சிதறும். அத்துடன் ஆட்டத்தின் நேரமும் அதிகரிக்கும்.  பொதுவாக இரவு 10 மணிக்கு போட்டி முடியவேண்டும் என்றால், பீல்ட் செட் செய்யவும், பந்துவீச்சாளரிடம் பேசவும் கேப்டன்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், இரவு 10.30 வரை ஆட்டம் நீளும். இதனால் பார்வையாளர்கள் தாமதமாக வீட்டுக்கு செல்லும் சூழலும் ஏற்படும். இதுபோன்ற காலதாமதத்தை குறக்கவே கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த 2018-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி, குமார் சங்ககாரா ஆகியோரைக் கொண்ட எம்சிசி கமிட்டி, ஸ்டாப் க்ளாக் முறையை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்த சிபாரிசு செய்திருந்தது. அதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கமிட்டி இப்போது ஸ்டாப் க்ளாக் முறையை கொண்டுவந்துள்ளது.

ஸ்டாப் க்ளாக் எப்படி செயல்படும்?

ஸ்டாப் கிளாக் முறைப்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்  ஒவ்வொரு அணியும், ஒரு ஓவரை வீசி முடித்தபின் அடுத்த ஓவரை வீச 1 நிமிடம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்துக்கொள்ள்ளக் கூடாது. மீறி எடுத்தால் முதல் 2 முறை எச்சரிக்கையுடன் விடப்படுவார்கள். அதையும் மீறி 3-வது முறையும் 1 நிமிடத்துக்கு மேல் எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். அந்த ரன், எதிரணியின் கணக்கில் சேர்க்கப்படும். அவர்கள் பேட்டிங் செய்யாமலேயே அந்த ரன்களைப் பெறுவார்கள்.

எப்போது அமலாகும்:

இந்த ஸ்டாப் க்ளாக் முறையை பரீட்சார்த்த ரீதியாக வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முயற்சித்துப் பார்க்க சர்வதேச கிரிக்கெட் கமிட்டி திட்டமிட்டுள்ளது.  இந்த காலத்தில் ஸ்டாப் க்ளாக் முறையால் ஏற்படும் மாற்றங்கள் பலன் தந்தால், அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். இந்த வகையில் பார்த்தால் டிசம்பர் 3-ம் தேதி நடக்கவுள்ள இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...