Arranged marriage செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனாலும் வீட்டில் சொல்லும் நபரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்பவர்களும், காதல் கல்யாணத்துக்கு எப்படியும் விட்டுல ஒத்துக்க மாட்டங்க! எதுக்கு ரிஸ்க்கு? என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்பொதெல்லாம் காதல் திருமணங்களைவிட பெற்றோர் முறைப்படி ஜாதகம் பார்த்து, ஸ்டேட்டஸ் பார்த்து சாஸ்திரப்படி திருமணம் செய்துவைத்தாலும், அந்த திருமணங்களில் பல விவாகரத்தில்தான் போய் முடிகிறது.
இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் திருமணப் பொறுப்பை பெற்றோர் தலையில் கட்டும் நபர்களுக்கு சில டிப்ஸ்..
1.ஸ்டேடஸ் அல்ல மனப்பொருத்தம்தான் முக்கியம்
Arranged marriage செய்துகொள்ளும் பலர் செய்யும் முதல் தவறு கல்யாணம் செய்துகொள்ளும் நபர் எவ்வளவு படித்திருக்கிறார், எத்தனை லட்சங்களில் சம்பளம் வாங்குகிறார், அவருடைய குடும்பத்தாரின் பின்னணி என்ன என ஸ்டேடஸைப் பற்றி அதிகம் பார்ப்பது. ஸ்டேடஸ் பார்ப்பதில் உள்ள ஆர்வத்தை சற்று கல்யாணம் செய்துகொள்ளும் நபரின் மனதை தெரிக்க கொள்வதிலும் காட்டலாம். திருமண பந்தத்தில் இணையப்போகும் ஆண், பெண் இருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இருவருக்கும் இடையில் இருக்கும் மன ஒற்றுமைதான். மன ஒற்றுமையை தவிர்த்து, மற்ற அனைத்து ஒற்றுமைகளை வைத்துத்தான் இங்கு பல திருமணங்கள் நடக்கின்றன.
2. பெற்றோரிடம் விளக்குங்கள்:
இங்கு பல திருமணங்கள் சுற்றியிருப்பவர்களின் கட்டாயத்தின் பேரில்தான் நடக்கின்றன. அம்மா சொல்லிடாங்க, அப்பா பேச்ச தட்டவே மாட்டேன் அவரு சொல்லிடாரு, என் அத்தை என் பொண்ணதா கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லிட்டாங்கன்னு கல்யாணம் பண்ணாதீங்க.
இப்படி அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு திருமணம் செய்துகொள்வது முட்டாள் தனம். உங்களுக்கு எப்படிப்பட்ட துணை வேண்டும் என்பதை பெற்றோகளிடம் தெளிவாக சொல்ல வேண்டும். மன்னிக்க முடியாத குற்றங்களுள் ஒன்று விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து வைப்பதும், விருப்பமில்லாமல் கல்யாணம் செய்து கொள்வதும்தான். நீங்கள் எடுக்கும் முடிவு இன்னொருவரின் வாழ்க்கையையும் முழுமையாக பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
3.நெருக்கடியின் பேரில் கல்யாணம் செய்து கொள்ளாதீர்கள்
நெருக்கடியின் பேரில் கல்யாணம் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு எத்தனை மாதம், இல்லை எத்தனை வருடம் தேவைப்பட்டாலும் நிதானமாக யோசித்து புரிந்துக்கொண்ட பிறகு கல்யாணம் செய்துக் கொள்ளுங்கள். பெற்றோர் அவர்களின் கடமை முடிந்தால் போதும் என்று நினைத்துதான் கல்யாண ஏற்பாடுகளை செய்வார்கள். மற்றவரின் அவசரத்தின் பேரில் கல்யாணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.
4. No சொல்ல தயங்காதிர்கள்!
திருமணம் பேசி முடித்து நிச்சியதார்த்தமே ஆகிவிட்டாலும் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் No சொல்ல சற்றும் தயங்காதீர்கள். “கல்யாணம் பண்ணினா எல்லாம் சரியாகிடும்” என்று ஒரு கூட்டம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும். அந்த கூட்டத்திடமிருந்து சற்று தள்ளியே இருங்கள்.
5. வாழ்க்கைத் துணையின் character-யை தெரிந்து கொள்ளுங்கள்
External factors என்று சொல்லப்படுகிற வாழ்க்கைத் துணையின் படிப்பு, சம்பளம் போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வதை விட வாழ்க்கை துணையின் குணம் அதாவது Character-யை தெரிந்து கொள்வதுதான் மிகவும் முக்கியம். அவர் எதற்கு கோபப்படுவார், அவரது பலம், பலவீனம் இந்த மாதிரியான விஷயங்களை தெரிந்து கொள்வது முக்கியம்.
இவை அனைத்தையும் தாண்டி கல்யாணத்தில் விருப்பமில்லாமல் மற்றவர்களுக்காகவும், சமூகம் என்ன சொல்லும் என்பதற்காகவும் கல்யாணம் செய்துக்கொள்வது இணையப் போகும் இரு இதயங்களுக்கும் நல்லதில்லை.
Love marriage விவகாரத்தில் போய் முடிவதே இல்லையா ?