விஜய் படங்கள் என்றாலே அவற்றின் ரிலீஸ் விஷயத்தில் ஏதாவது ஒரு வில்லங்கம் இருப்பது வாடிக்கையான ஒன்று. அரசியல் சார்ந்தோ அல்லது வியாபாரம் சார்ந்தோ ஏதாவது ஒரு பிரச்சினை பின்னணியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும். இந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டிதான் விஜய் படங்கள் வெளியாகின என்பது வரலாறு.
இப்போது விஜய், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘லியோ’ படம் வெளியாவதிலும் புது சிக்கல் உருவாகி இருக்கிறது.
2 மணி நேரம் 39 நொடிகள் லியோ படம் ஓடுகிறதாம். இந்தப்படத்தை அக்டோபர் 19-ம் தேதி வெளியிடும் வேலைகள் படு ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. திரையரங்கு, வெளிநாட்டு உரிமை நல்ல விலைக்கு வியாபாரமாகி இருக்கின்றன. இந்நிலையில் ஒடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இங்கேதான் விஜய்க்கு சிக்கல் கிளம்பியிருக்கிறது.
பொதுவாகவே ஒரு முன்னணி நட்சத்திரத்தின் புதிய திரைப்பட வெளியானால், படம் திரையரங்குகளில் 8 வாரங்கள் ஒடிய பிறகுதான், ஒடிடி-யில் வெளியிடவேண்டும் என்ற ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ் அல்லது தெலுங்குப் படங்கள் வெளியானால் 8 வாரங்கள் கழித்து அந்தந்த மொடியின் ஒடிடி பதிப்பில் வெளியாகி வருகின்றன. ஆனால் ஹிந்தி ஒடிடி-யில் அவற்றை நான்கு வாரங்களிலேயே ஸ்ட்ரீமிங் செய்துவிடுகிறார்கள்.
இதனால் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள் ஹிந்தி ஒடிடி மார்க்கெட்டில் அவற்றுக்கான வியாபாரத்தை இழப்பது ஆரம்பமாகி இருக்கிறது. அதில் விஜயின் ‘லியோ’ படமும் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
’லியோ’ ஹிந்திப் பதிப்பை 8 வாரங்களுக்கு முன்பாகவே ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில் நெட்ஃப்ளிக்ஸ் உடன் அப்படத்தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக பேச்சு அடிப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் உடனான ஒப்பந்தம் இப்படிதான் என்று உறுதியானால், பி.வி.ஆர்., சினிபோலீஸ் போன்ற மல்ட்டிஃப்ளெக்ஸ் நிறுவனங்கள் லியோவை ஹிந்தியில் திரையிட மாட்டோம் என கூறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.