No menu items!

மஞ்சு வாரியர் அம்சமாக இருப்பது இதனால்தான்!

மஞ்சு வாரியர் அம்சமாக இருப்பது இதனால்தான்!

மஞ்சு வாரியர், இப்போது தமிழ் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். காரணம் இங்கு அவருக்கு கெளரவமான கதாபாத்திரங்களைக் கொடுப்பதும், சம்பளத்தை அதிகம் அளிப்பதும்தான்.

மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் வந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவிலில்தான் என்றப்படி அழகான தமிழில் பேசுகிறார்.

திருமணமாகி, குழந்தைப் பிறந்து பல ஆண்டுகள் கழித்தும் கட்டுக்கோப்பான தோற்றத்தில் இருப்பதும், நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதில் இருக்கும் நளினமும் இவருக்கு இங்கே வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றன.

45 வயதைத் தொட்ட பிறகும் எப்படி இப்படி வசீகரமாக இருக்க முடிகிறது என்பது குறித்து அவரே குறிப்பிட்ட டயட் இதோ.

சாப்பாட்டில் எண்ணெய் அதிகம் சேர்த்து கொள்வது இல்லை. தேவைப்பட்டால் கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் மட்டும்தான்.

பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ளலாம்.

வீட்டில் சமைத்த உணவுகளே சிறந்தவை. முடிந்தவரை வெளியே சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

நாக்கை சுண்டி இழுக்கும் சுவையுடைய ப்ராஸஸ்ட் ஃபுட் வகையறாக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கதக்களி நடனம் தெரியும் என்பதால், தினமும் ஆடுவது வழக்கம். ஆனால் உங்களுக்கு நடனம் தெரியாது என்றால் யோகாவை முயற்சிக்கலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்காக ஜிம் பக்கம் போவது இல்லை. ஆனால் தினமும் ஒரு மணிநேரமாவது வாக்கிங் செல்ல வேண்டும்.

தாகமெடுக்கும் போது தண்ணீர் குடியுங்கள். தவிர்க்காதீர்கள்.

எப்பொழுதும் மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.

இப்படி 8 டிப்ஸ்களை கொடுக்கிறார் மஞ்சு வாரியர். இதுதான் அவரது அசத்தல் தோற்றத்திற்கு காரணமாம்.


தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டார்லிங் சுனில்!

’ஜெயிலர்’ படத்தில் ’ப்ளாஸ்ட் மோகன்’ கதாபாத்திரத்தில் நடித்த சுனில்தான் இப்பொழுது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டார்லிங் ஆகியிருக்கிறார். ‘ப்ளாஸ்ட் மோகன்’ ஆக இவர் செய்த ரகளைக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு.

யார் இந்த சுனில்?

சுனில் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர். தனது டைமிங் டயலாக்குகளால் காட்சிகளைக் கலகலப்பாக்குபவர்.

ஒரு காமெடியனாக வலம் வந்தவர் திடீரென சிக்ஸ் பேக்கில் முறுக்கேற்றியபடி ஹீரோவாகவும் அதிர வைத்தவர்.

ஹீரோவாக தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றாலும், இவரது காமெடிக்கு என ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

‘நுவ்வே கவாலி’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான, சுனில் சுமார் 100 தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார்.

அல்லு அர்ஜூன் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ’புஷ்பா’ படத்தின் தமிழ் பதிப்பின் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார் சுனில். இவரது மங்களம் ஸ்ரீனு கதாபாத்திரத்தின் மூலம் வில்லத்தனமாக நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்திலும் சுனில் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் சுனிலை ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் நெல்சன். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ’ப்ளாஸ்ட் மோகனுக்கு’ அதிரிபுதிரி ஆரவாரம் கிடைத்தது.

இப்பொழுது வெளியாகி இருக்கும் விஷால் – எஸ்.ஜே. சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் சுனில் நடித்திருக்கிறார்.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், சுனிலுக்கு இப்போது மவுசு ஏன் என்பது புரியும்.

‘ப்ரின்ஸ்’ என்ற தோல்வி படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ‘மாவீரன்’ சொல்லிக்கொள்கிற மாதிரியான படமாக அமைந்திருக்கிறது. இதில் சுனில் நடித்திருக்கிறார்.

அதேபோல் ‘அண்ணாத்தே’ படத்திற்கு பிறகு ரஜினிக்கும் ஒரு ஹிட் வேண்டுமென்ற சூழ்நிலையில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் சுனில் தூள் கிளப்பியிருக்கிறார்.

சில வருடங்களாக ஹிட்டுக்காக காத்திருந்த விஷாலுக்கும் ‘மார்க் ஆண்டனி’ நம்பிக்கை அளித்திருக்கிறது. விஷாலின் சினிமா கேரியரில் 100 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற பெருமையை ‘மார்க் ஆண்டனி’ பெற்றிருக்கிறது. இதிலும் சுனில் இருக்கிறார்.

இப்படி ஹிட்டுக்காக போராடிய கமர்ஷியல் ஹீரோக்களின் சமீபத்திய படங்களில் சுனில் நடித்திருப்பது அவருக்கென ஒரு தனி மவுசை தமிழ் சினிமாவில் உருவாக்கி இருக்கிறது.

மேலும் கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்திலும் சுனில் நடித்து வருகிறார்.

இப்படி அதிரடி எண்ட்ரீ கொடுத்திருக்கும் சுனில், ’ராசியான காமெடியன்’ என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கிறார்.

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் யோகி பாபுவுக்கு போட்டியாக சுனிலை இனி பார்க்கலாம் என்கிறார்கள் கோலிவுட் புள்ளிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...