No menu items!

கிரிக்கெட்டில் மழை – ஜெய்ஷா செய்த தப்பா?

கிரிக்கெட்டில் மழை – ஜெய்ஷா செய்த தப்பா?

பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் தூள் கிளப்ப வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், துரதிருஷ்டவசமாக மழை விளையாடிக்கொண்டிருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி உட்பட பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட,  கிரிக்கெட் ரசிகர்கள் நொந்து போய் இருக்கிறார்கள். இதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவை சபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கிரிக்கெட் போட்டிகளின்போது மழை பெய்தால், அதற்கு ஏன் ஜெய் ஷாவை சபிக்க வேண்டும்? அவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?… அதற்கும் காரணம் இருக்கிறது.

நியாயமாக பார்த்தால் இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமாக பாகிஸ்தானில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தால், இந்தியா அதில் பங்கேற்காது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. இந்தியா ஆடாவிட்டால் போட்டிக்கு முக்கியத்துவம் கிடைக்காது என்பதாலும், அதனால் போதிய வருவாய் கிடைக்காது என்பதாலும், பாகிஸ்தான் ஆடும் சில லீக் போட்டிகளை மட்டும் அந்நாட்டில் வைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள போட்டிகளை இலங்கையில் நடந்த பிசிசிஐதான் சிபாரிசு செய்தது என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் இப்போது பல பகுதிகளில் மழைக்காலம். அதேபோல் இலங்கையிலும் இது மழைக்காலம். இந்த சூழலில் மழைக்காலம் இல்லாத ஐக்கிய அரபு அமீரகம் அல்லது நேபாளம் ஆகிய நாடுகளில் போட்டிகளை வைத்திருக்கலாம். ஆனால் இந்தியாவோ, இலங்கையில்தான் போட்டியை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறது.

இலங்கையில்கூட அதிகம் மழை பெய்யாத பகுதிகளில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அங்கும் கொழும்பு நகரில்தான் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறது பிசிசிஐ. அதன் செயலாளரான ஜெய் ஷா பிடிவாதமாக இருந்த்தால்தான் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உட்பட பல முக்கிய போட்டிகளை கொழும்புவில் நடத்தவேண்டி வந்தது. இப்போது மழை காரணமாக அங்கு போட்டிகள் பாதிக்கப்பட, எல்லோரும் ஜெய் ஷாவை சபித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு எதிரான விமர்சனங்களால் சமூக வலைதளங்கள் நிரம்பி வழிகின்றன.

அமைதியான குணம் கொண்டவர் என்று பெயரெடுத்த வெங்கடேஷ் பிரசாத்கூட ஜெய் ஷாவை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் வெளியிட்டு பின்னர் அதை நீக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

மழையால் போட்டிகள் நடக்காமல் போவது ஒருபுறம் இருக்க, மழைக்கு பிறகு போட்டிகள் நடந்தால் மைதானத்தில் வீர்ர்கள் சறுக்கி விழுந்து காயம் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 3 நாட்கள் இந்திய வீர்ர்கள் தொடர்ந்து  ஆடவேண்டிய சூழல் இருக்கிறது. உலகக் கோப்பைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் யாராவது காயமடைந்தால் இந்தியாவுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஜெய் ஷா மீது கடுமையான விமர்சனங்கள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆசிய கோப்பை ஒரு டிரெயிலர்தான். உலகக் கோப்பையில்தான் மெயின் படமே இருக்கிறது. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்க மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை நடக்கப் போகிறது. இதுபோன்ற பல போட்டிகள் மழைய்டால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் பண்டிட்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...