அறிவியல் வளர்ச்சி, நாளுக்கு நாள் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டே போகிறது.
சந்தரயான் 3, ஆதித்யா L1 விண்கலங்கள் கொடுத்த ஆச்சரியங்களில் இருந்து வெளியே வருவதற்குள், சூரிய குடும்பத்தில் பூமியைப் போன்ற ஒரு புதிய கோள் இருக்க வாய்ப்புள்ளதாக ஜப்பானிய அறிவியல் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூரிய குடும்பத்தில் பூமிக்கு இன்னொரு சகோதரன் இருப்பதாக ஜப்பானியர்கள் கண்டறிந்த்து நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.
சூரிய குடும்பத்தில் நாம் வாழும் பூமியையும் சேர்த்து மொத்தம் எட்டு கோள்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எட்டு கோள்களா?… 9 கோள்கள் என்று படித்த்து ஞாபகம் வருதே என்கிறீர்களா?… இந்த 9 கோள்களில் ப்ளூட்டோ சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததில்லை என்று அறிவியலாளர்கள் அதை ஏற்கெனவே சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேற்ரி விட்டார்கள்..
இந்த சூழலில்தான் “Planet Nine” என்று புதிதாக ஆழைக்கப்படுகிற பூமியைப் போன்ற கோள், சூரிய குடும்பத்தைச் சுற்றி டோனட் வடிவில் “கைபர் பெல்ட்” – லில் இருக்க வாய்ப்புள்ளதாக ஜப்பானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கைபர் பெல்ட் சூரியனின் புது சொந்தங்களாக பார்க்கப்படுகிறது.
“கைபர் பெல்ட்”(Kuiper Belt) என்ற சொல், அறிவியல் பற்றிய செய்திகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு புதிதல்ல.
கைபர் பெல்ட் என்பது, சூரிய குடும்பத்தைச் சுற்றி வெகு தொலைவில் ஐஸ் கட்டிகள், வால் நட்சதிரங்கள், மற்றும் துசு போன்ற துகள்களால் ஆன டோனட் வடிவில் உள்ளவைகளை கைபர் பெல்ட் என்று கூறுவர்.
கைபர் பெல்ட் என்று சொல்லப்படுகிற இந்த இடத்தில் ”பூமியைப் போன்ற கோள்” மறைந்துக்கொண்டு பூமியைச் சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்று பல கோள்களும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.