10 ஆண்டுகளாக முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த தமன்னா தனது ஆண் நண்பரான விஜய் வர்மாவுக்காக தனது ‘நோ கிஸ்’ கொள்கையைக் கூட கைவிட்டு விட்டு ‘லஸ்ட் ஸ்டோரிஸ் -2’ என்னும் வெப் சிரீஸில் முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.
அந்தளவிற்கு தமன்னாவின் மனதை ஆக்ரமித்து இருக்கிறார் விஜய் வர்மா.
அப்படியானால் தமன்னா – விஜய் வர்மா ஜோடியின் அடுத்தக்கட்டம் என்னவாக இருக்கும் என்று ஊடகங்கள் யோசித்து கொண்டிருக்கையில், இருவரும் சத்தம் போடாமல் மாலத்தீவுக்கு ஒரு சுற்றுலா சென்று வந்திருக்கிறார்கள்.
மாலத்தீவில் பொழுதைக் கழித்த தமன்னா தன்னுடைய கவர்ச்சிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு இளசுகளை அலைப்பாய விட்டிருந்தார். ஆனால் இந்த புகைப்படங்கள் ஒன்றில் கூட விஜய் வர்மா இல்லை.
ஆனால் இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு திரும்பி வருகையில் பாப்பராசிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள்.
முதலில் தனியாக வந்த தமன்னா வளைத்து வளைத்து புகைப்படங்கள் எடுத்த பாப்பராசிகள், ‘விஜய் சார் வரவில்லையா’ என்று கேள்வி கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கனத்த சிரிப்புடன் தமன்னா நழுவிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து வந்த விஜய் வர்மாவையும் பாப்பராசிகள் விடவில்லை. அவரையும் புகைப்படங்களாக எடுத்தவர்கள், ‘மாலத்தீவு கடலில் என்ஜாய் பண்ணீர்களா?’ என்று கேட்க, விஜய் வர்மாவின் எரிச்சலில் சிவப்பாக மாறிவிட்டது.
‘நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது’ என்றபடியே விஜய் வர்மாவும் இடத்தை காலிபண்ணிவிட்டார்.
விடாமுயற்சியில் சஞ்சய் தத்!
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை ஒரு பான் – இந்தியா படமாக கொண்டு செல்வதில் லியோ தயாரிப்பாளர் லலித் தீவிரமாக இருக்கிறார்.
இதனால்தான் ’கேஜிஎஃப்’ பட த்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராசியான வில்லனாக அறியப்படும் பாலிவுட்டின் சஞ்சய் தத்தை லியோவில் வில்லனாக களமிறக்கி இருக்கிறார்கள்.
முதல் முறையாக விஜய் படத்தை பான் – இந்தியா படமாக முன்னிறுத்த இருப்பது ஒருப்பக்கம் என்றால், இப்போது அஜித் நடிக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தையும் பான் – இந்தியா படமாக கொண்டு செல்ல லைகா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அஜித்திற்கு வில்லனாக சஞ்சய் தத்தை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். கதையின் படி அஜித்திற்கு எதிராக இரண்டு வில்லன்கள் இருப்பதாகவும், அதில் ஒருவர் அர்ஜூன் தாஸ் என்றும், மற்றொரு மெகா வில்லனாக சஞ்சய் தத் நடிக்கப் போவதாகவும் பேச்சு அடிப்படுகிறது.