அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்திருக்கும் ‘ஜவான்’ படம் செப்டெம்பர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்பட விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் ஷாரூக்கான் கலந்து கொண்டு பேசியதுதான் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
‘மிகச்சிறந்த படங்கள் தமிழ் நாட்டில் இருந்து வரும் என்பது எனக்கு முன்பே தெரியும். இங்கே இரண்டு நண்பர்களைப் பெறும் வாய்ப்பும் எனக்கு கிடைச்சது. மணிரத்னம், சந்தோஷ் சிவன் இவர்கள் இருவருடைய நட்பும், ‘தில் சே’ படத்திற்காக நான் இங்கே நடிக்க வந்தபோது நண்பர்களானார்கள். அதன் பிறகு கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் நடிச்சேன். இன்னொரு சிறந்த நண்பர், கூப்பிட்ட உடனே கிளம்பி வந்தவர் ‘ரா ஒன்’ படத்தில் ஒரு காட்சிக்காக நடிச்சு கொடுத்தார். அவர்தான் ரஜினிகாந்த்.
விஜய் சேதுபதியை நான் மெல்போர்ன்லதான் சந்திச்சேன். அப்புறம் அவரை நயன்தாரா திருமணத்தின் போது மீண்டும் சந்திக்க முடிஞ்சது. அவர்கிட்ட இருந்து நான் எவ்வளவு கத்துகிட்டு இருக்கேன்னு சொல்ல தெரியல. விஜய் சேதுபதிகிட்ட இருந்து கத்துகிட்டதை நான் அப்படியே ஆடியன்ஸூக்கு கொடுத்திருக்கேன்.
இந்த அனிருத் என் மகன் மாதிரி. உங்களோட போன்கால்களை மிஸ் பண்ணப்போறேன்னு சொன்னார். நான் போன் பண்ணினா அதை எடுக்காம விடுற மாதிரி பாலிவுட் பழக்கவழக்கத்தை அவர் இன்னும் கத்துகலன்னு நினைக்கிறேன். உங்களை மிஸ் பண்ணுவேன், என் மகனே’ என்று ஷாரூக்கான் பேசியதுதான் இப்போது வைரலாகி வருகிறது.
மிரட்டலாக உருவாகும் ராஜமெளலியின் ’மகாபாரதம்’!
நம்மூர் ஷங்கரைப் போலவே தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் எஸ்.எஸ். ராஜமெளலி. எடுத்தால் பிரம்மாண்டமான பட்ஜெட்டில்தான் படம் எடுத்தாகவேண்டுமென்ற கட்டாயத்திற்கு இப்போது ராஜமெளலியும் தள்ளப்பட்டிருக்கிறார்.
இதனால் தற்போது மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்திற்குப் பிறகு, மகாபாரதம் புராணக்கதையை எடுக்கவிருக்கிறாராம்.
மகாபாரதம் படத்திற்குப் பிறகு ராஜமெளலி படமெடுக்கும் எண்ணத்தில் இல்லையென்றும் கூறுகிறார்கள். இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், மகாபாரதம் கதை மிகப்பெரியது. அதனால் அதனை 10 பாகங்களாக எடுக்கும் திட்டமிருக்கிறதாம்.
இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் என்பதால் இதில் யார் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
விசாரித்தவகையில் மகாபாரதம் ப்ராஜெக்ட்டில், கிருஷ்ணர் வேடத்தில் மகேஷ் பாபு, கர்ணன் வேடத்தில் பிரபாஸ் என ராஜமெளலி திட்டமிட்டு இருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது. இந்த இரு முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர்த்து, அர்ஜூனனாக ராம் சரணும், பீமனாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அல்லு அர்ஜூனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.
அதேபோல் இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாராக இருப்பதால், பான் – இந்தியா படமாக அல்லாமல் உலகளாவிய திரைப்படமாக இருக்கவேண்டுமென்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்களையும் நடிக்க வைக்கும் யோசனையும் இருக்கிறது என சொல்கிறார்கள்.
குறிப்பாக அமிதாப் பச்சன், ஹிர்திக் ரோஷன், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர்கான் என பெரிய புள்ளிகளையும் எப்படியாவது நடிக்கவைத்துவிட வேண்டும் எனவும் ராஜமெளலி விரும்புகிறாராம்.
அதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து கார்த்தி, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களையும் நடிக்க வைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் டோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.
இந்த நட்சத்திரப் பட்டாளத்தைப் பற்றி கேட்கும் போதே பிரம்மாண்டமாக இருக்கிறது. இப்படியொரு ப்ராஜெட் உறுதியானால் நிச்சயம் இது க்ளோபல் ஃப்லிம் ஆக இருக்கும் என்பது உறுதி.
சீதையாக சாய் பல்லவி!
நடிகை சாய் பல்லவி மளையாள திரையுலகில் தோன்றி பிரபலமானாலும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் பாலிவுட்டில் களமிறங்க தயாராக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
’தங்கல்’ பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கபோகிறார், என்றும் கதைக் களம் வரலாற்று சிறப்பு மிக்க ராமாயணத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ’ஆதிபுருஷ்’ படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை, தயாரிப்பாளருக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ராமாயணக் கதையை எடுக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி.
அந்த படத்தில் ராமராக ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க போகிறார். என்றும் சீதையாக முதலில் ஆலியா பட் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் வெளியேறிய நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி தான் சீதையாக நடிக்க போகிறார் என தகவல் பரவி வருகிறது.
சாய் பல்லவி தற்போது ’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.