இன்று(ஆகஸ்ட் 30), சூப்பர் ப்ளூ மூன்
நிலவில் இஸ்ரோ நிகழ்த்திய சந்தரயான் 3 சாதனையை நாம் ரசித்துக்கொண்டு இருக்க, ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆன இன்று நிலவில் இன்னொரு அதிசயமும் நடைபெறவுள்ளது. நிலவு, சூப்பர் ப்ளூ மூன்- ஆக காட்சியளிக்க போகிறது.
சூப்பர் ப்ளூ மூன் – ஆ? அப்படி என்றால் என்ன ? நீல நிறத்தில் நிலா இருக்கப் போகிறதா? இந்த நிலாவில் என்ன சிறப்பு?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகளைப் பார்ப்போம்.
மாதத்திற்கு ஒரு பௌர்ணமி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தோன்றினால் அது தான் ப்ளூ மூன்(blue moon) என்று அழைக்கபடுகிறது.
ப்ளூ மூன்(blue moon) என்றால், நிலவு நீல நிறத்தில் காட்சியளிக்கும் என்ற அர்த்தமில்லை.
once in a blue moon, ஆங்கிலத்தில் இந்த சொற்சொடரை நாம் அனைவரும் கேள்வி பட்டிருப்போம். once in a blue moon என்றால் அரிதாக நடக்கும் நிகழ்வை குறிப்பது.
இது போல அரிதாக, ஒரு மாதத்திற்கு இரண்டு பௌர்ணமி வருவதை தான் புளூ மூன் என்று அழைக்கிறார்கள்.
29.5 நாட்களுக்கு ஒரு முறை முழு நிலவு தோன்றும். மாதத்தில் முதல் நாள் முழு நிலவு தோன்றி மீண்டும் மாதம் இறுதியில் முழு நிலவு தோன்றுவதை தான் புளூ மூன் (blue moon) என்கின்றனர்.
இது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தோன்றிய பௌர்ணமிக்குப் பிறகு இதே ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பௌர்ணமி தெரிய போவதால் இந்த நிகழ்வை ப்ளூ மூன்(blue moon) என்று அறிவியல் வல்லூனர்கள் கூறுகின்றனர்.
சரி, சூப்பர் மூன்( super moon ) என்பது ?
சூப்பர் மூன் என்பது பூமியை நிலவு சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது, பூமிக்கு மிக அருகில் நிலவு வருவதால் பூமியிலிருந்து நிலவை காணும்பொழுது மிகவும் பெரியதாகவும்,பிரகாசமாகவும் தெரியும். இந்த நிகழ்வை தான் சூப்பர் மூன் என்று அழைப்பார்கள்.
இந்த இரண்டு நிகழ்வும் சேர்ந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆன இன்று நடக்கப்போவதால், இந்த அரிய நிகழ்வை சூப்பர் ப்ளூ மூன் ( super blue moon) என்கிறார்கள்.
இந்த அரிய நிகழ்வை எப்போது பார்க்கலாம்?
அமெரிக்கா போன்று நாடுகளில் EST நேரத்தின் படி இன்று இரவு 7 மணி அளவில் காண முடியும்.
இந்தியாவில், IST நேரத்தின் படி நாம் காண சரியான நேரம் நாளை விடியற்காலை 4.30 மணியளவில் நிலவின் பிரகாசத்ததை காண முடியும் என்கின்றனர் அறிவியல் வல்லுனர்கள்.
இந்த நிகழ்வை காணும்பொது saturn என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற சனி கிரத்ததையும் வெறும் கண்களால் காண முடியும் என்கிறது நாசா(NASA). டெலஸ்கோப் போன்ற கருவிகள் பயன்படுத்தி காணும் போது இன்னும் தெளிவாக காண முடியும். வெறும் கண்களால் காணும்போது நிலவுக்கு அருகில் நட்சத்திரம் போல காட்சியளிக்கும்.
இந்த மூன்று நிகழ்வும் ஒரே நாளில் நடைபெறுவதால் இந்த நிகழ்வை காண அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
once in a blue moon, என்ற ஆங்கில சொற்சொடர் இந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்வுக்கு பொருத்துமாகவே இருக்கிறது.