’மையோசிடிஸ்’ என்னும் ஆட்டோஇம்யூன் பிரச்சினையைப் பற்றி தெரிந்து கொள்ள அதுபற்றி கூகுளில் அதிகம் தேடிப்பார்க்க செய்தவர் சமந்தா.
மையோசிடிஸ் பிரச்சினை, மனம் உறுதிமிக்க சமந்தாவையும் கூட அடித்துப் போட்டது போல் நிலைகுலைய வைத்துவிட்டது.
ஒரு வழியாக அதிலிருந்து மீண்ட சமந்தா, மளமளவென பாலிவுட் வாய்ப்புகளாக மும்பையில் முகாமிட்டார். அதற்கு பலன் கிடைத்தது. ‘சிடாடல்’ வெப் சிரீஸின் இந்திய பதிப்பில் கமிட்டானார். அதேபோல், நீண்டநாட்களாக காத்திருந்த ‘குஷி’ பட ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்போது இரண்டின் ஷுட்டிங்கும் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டன. இதனால் இன்னும் கொஞ்ச நாட்களில் சமந்தாவுக்கு ஷூட்டிங் எதுவும் இல்லை.
இந்நிலையில்தான் சமந்தா ஒரு திடீர் முடிவை எடுத்திருக்கிறார். அடுத்து ஒரு வருடம் சினிமா பக்கமே தலைக்காட்டப் போவதில்லை. மையோசிடிஸ் பிரச்சினையில் இருந்து முழுமையாக குணமடைய மிக அவசியமான மருத்துவ சிகிச்சைகளை இந்த ப்ரேக்கில் எடுப்பது என திட்டமிட்டு இருக்கிறாராம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் முன்பே வாங்கிய அட்வான்ஸை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இதுதவிர வேறெந்த புதிய தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் சமந்தா கமிட் ஆகவும் இல்லை.