5 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை வென்ற ஐபிஎல் கோப்பைகளின் எண்ணிக்கை.
250- தோனி இதுவரை ஆடிய ஐபிஎல் போட்டிகள். நேற்று நடந்த போட்டியின் மூலம் 250 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். தோனிக்கு அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 243 போட்டிகளில் ஆடியுள்ளார்.
6 – ஒரு அணியின் வீரராக அம்பட்டி ராயுடு வென்றுள்ள ஐபிஎல் கோப்பைகளின் எண்ணிக்கை. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் பட்டத்தை வென்றபோது, அந்த அணிகளில் ராயுடு இருந்துள்ளார்.
890- இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மான் கில் அடித்துள்ள மொத்த ரன்கள். இதன் மூலம் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை சுப்மான் கில் பெற்றுள்ளார். 2016-ல் 973 ரன்களைக் குவித்த கோலி இப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
214 – ஐபிஎல் இறுதிப் போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இந்த ஸ்கோரை குஜராத் டைட்டன்ஸ் அணி குவித்தது.
96 – இறுதிப் போட்டியில் சாய் சுதர்ஷன் குவித்த ரன்கள்.
672 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடியான டெவான் கான்வாயும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்த தொடரில் முதல் விக்கெட்டுக்கு குவித்த மொத்த ரன்கள்.
2 – கடைசி பந்தில் கோப்பை யாருக்கு என்று தீர்மானிக்கப்பட்டது ஐபிஎல் தொடரில் இது 2-வது முறை.
35 – இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிவம் துபே அடித்த சிக்சர்களின் எண்ணிக்கை. இதன்மூலம் இத்தொடரில் சிஎஸ்கேவுக்காக அதிக சிக்சர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற சாதனையை துபே படைத்துள்ளார்.
62 – பவர் ப்ளேவில் குஜராத் டைட்டன்ஸ் குவித்த ரன்கள்.
572 – இந்த தொடரில் அகமதாபாத் ஸ்டேடியத்தில் மட்டும் சுப்மான் கில் குவித்த ரன்கள்.