நடிகை கஸ்தூரிக்கு நடிப்பு வாய்ப்புகள் குறைந்திருப்பதால் இப்போதெல்லாம் ட்விட்டரில் யாரையாவது வம்புக்கிழுத்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார். அப்படி நேற்று அவர் வம்பிக்கிழுத்தவர் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
ஒரு சின்ன பின்னணி.
சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு விருது வழங்கு விழாவில் ரஹ்மானும் அவரது மனைவியும் அழைப்பட்டிருந்தார்கள். ரஹ்மானின் மனைவியை மேடைக்கு அழைத்து பேசச் சொன்னார்கள். மிகுந்த கூச்சத்துடன் பேசத் தொடங்கிய மனைவியிடம் ரஹ்மான், ‘இந்தில பேசாதிங்க, தமிழ்ல பேசுங்க ப்ளீஸ்’ என்றார். மனைவி சாய்ரா வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே, ‘My god…sorry எனக்கு தமிழ் சரளமாக வராது’ என்று கூறி ஆங்கிலத்தில் பேசினார். இது ஒரு Cute Momment ஆக சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த வீடியோவை ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் பாஜகவின் ஆதரவளார்கள் ரஹ்மானை விமர்சிக்கத் தொடங்கினர். தமிழ் தமிழ் என்று மேடைகளில் பேசும் ரஹ்மான் வீட்டில் தமிழ் பேசுவதில்லையா என்று கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கு ரஹ்மானின் ரசிகர்களும் திராவிட ஆதரவாளர்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக நின்றார்கள்.
இந்தப் பின்னணியில் கஸ்தூரி உள்ளே நுழைகிறார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஹ்மான் -சாய்ரா வீடியோவை பகிர்ந்து, ‘என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? #arrahman’ என்று அப்பாவியாய் கேள்வி எழுப்ப..,மீண்டும் விவாதங்கள் கிளம்பின.
கஸ்தூரியின் பதிவுக்கு கீழ் பல கருத்துக்கள்….. கொச்சை மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,,,,கஸ்தூரியை கழுவி கழுவி ஊற்றியிருந்தன.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்திருப்பார் போல ஏ.ஆர்.ரஹ்மான். நேற்றிரவு கஸ்தூரிக்கு ட்விட்டரில் ஒரு பதில் பதிவு போட்டிருந்தார். இரண்டே வார்த்தைகள்தாம். ‘காதலுக்கு மரியாதை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஹ்மானின் பதிவுக்கு கஸ்தூரி பதில் பதிவாக ஒரு Thumbs Up எமோஜியை மட்டும் பதிந்திருந்தார்.
ரஹ்மான் இரண்டே வார்த்தைகளில் தன் கருத்தை சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் ட்விட்டரில் இன்னும் கஸ்தூரியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். கஸ்தூரியும் திரும்பித் திட்டிக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சிப் பொறுப்பு வந்தப் பிறகு கஸ்தூரி தொடர்ந்து திராவிடக் கொள்கைகளைக் குறித்து கிண்டலும் கேலியுமாக பதிவுகள் போடுவார். குறிப்பாக பிரமாணருக்கு எதிராக செய்திகள் வந்தால் உடனே வெகுண்டு எழுந்து கடுமையான கருத்துக்களை முன் வைப்பார்.
அவர் இப்போது திராவிட என்று கூறுவதில்லை..’திராவிடிய’ என்று கொச்சைப்படுத்திதான் எழுதுவார்.
ரஹ்மான் சர்ச்சைக்கு ட்விட்டரில் அவர் அளித்த பதிலிலும் அப்படிதான் குறிப்பிட்டிருக்கிறார்.
மேடம்
@KasthuriShankar
உங்க வன்மத்தை அவரிடம் காட்டுனீங்க அவர் எவ்ளோ அன்பா பதில் சொல்லியிருக்கார் பாருங்க, அவர் வீட்ல என்ன பேசுவாங்க உங்களுக்கு தெரியனுமா?அண்ணாமலைகிட்ட சொல்லுங்க ஆடியோ ரெக்கார்டிங் பண்ணி அனுப்புவார்😂 அடுத்தவன் வீட்ல எட்டி பார்க்காதீங்க ப்ளீஸ் – என்று S.Thiyagarajan @Thiyaga74113085 என்பவர் சொல்ல கஸ்தூரி கடுப்பாகிவிட்டார்.
‘சும்மா உருட்டாதீங்க. என் கேள்வியில் வன்மம் எதுவும் இல்லை. இத்தனை வருடம் தெரியாமல் இருந்தது, அவரே சொல்லித்தானே தெரிய வந்தது. வியப்பு கலந்த நியாயமான வினா எழுப்பியிருந்தேன். நேர்மையாக நேரடியாக என் சந்தேகத்தை கேட்டேன். ARR அவர்கள் cute ஆகா பதில் சொல்லியிருக்கிறார். குறுக்கு புத்தி படைத்தவர்கள் உள்ளே புகுந்து இதில் குளிர் காய நினைக்காதீர்கள். வெறுப்பு அரசியல் செய்யும் திராவிடிய சித்தாந்தவாதிகள் கிடைத்தது சாக்கு என்று இல்லாத பிரச்சினையை உருவாக்க துடிக்கிறார்கள். இதில் அண்ணாமலை எங்கு வந்தார். அதிலேயே தெரிகிறது உங்கள் நோக்கம். சிண்டு முடியும் சாத்தான்களே ஓடி விடுங்கள்.’ என்று அவருக்கு பதிலளித்திருக்கிறார்.
‘yes …so many times met him and his wife never knew she is from Gujarat’ – என்று இன்னொரு கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.