நயன்தாராவுக்கு திருமணமாகிவிட்டது. அப்படியே அவர் நடித்தாலும் சூப்பர்ஸ்டார்களுடன் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். இல்லையென்றால் கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் மட்டுமே நடிக்கிறார்.
காஜல் அகர்வாலும் திருமணமாகி ரிஎண்ட்ரீ கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு இன்னும் மவுசு இருக்கிறதால் இல்லையா என்ற சந்தேகம் எல்லோருக்கு இருக்கிறது. அதற்கேற்றால் போல் அவர் நடித்து வெளியாகி இருக்கும் ‘கோஸ்டி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
கீர்த்தி சுரேஷ் தெலுங்குப் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்.
சமந்தா, ராஷ்மிகா பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரவேண்டுமென மும்பைவாசி ஆகியிருக்கிறார்கள்.
ப்ரியங்கா மோகன், அதீதி ஷங்கர் இன்னும் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை.
பூஜா ஹெக்டே நடித்தப் படங்கள் எதுவும் அவருக்கு ப்ளஸாக இல்லை.
த்ரிஷா, தமன்னா ரொம்பவே பழகிப் போன முகங்களாகிவிட்டார்கள்.
இப்படி தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயின்களுக்கான பஞ்சம் நிலவுவதால், யாராவது ஒரு நல்ல கதாநாயகி கிடைக்க மாட்டாரா என்று மும்பைக்கும், ஹைதராபாத்திற்கும் பறந்து கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள படைப்பாளிகள்.
இந்த சூழ்நிலையில்தான், ’சீதாராமம்’ படத்தில் இளவரசி நூர்ஜஹானாக மனதைக் கொள்ளை கொண்ட மிருனாள் தாக்கூர் பக்கம் எல்லோருடைய கவனமும் திரும்பியது.
மெஹா ஹிட் கொடுத்த பின்னரும் கூட, ஒரு படம் கூட ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் மிருனாள். இவருக்கு ஏதோ பிரச்சினை போல என்று ஊடகங்களில் கிசுகிசுக்கள் கிளம்பின.
ஆனால் பட்டென்று தெலுங்கில் மினிமம் கியாரண்டி உள்ள நடிகர்களில் ஒருவரான நானியுடன் நடிக்க ஒப்பந்தமானார் மிருனாள்.
இதேவேகத்தில் தமிழில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு பேச்சு கிளம்பியது. ’சூர்யா42’-க்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் படத்தில் மிருனாள் ஒப்பந்தமாகி இருக்கிறார். மிருனாள் தென்னிந்தியப் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார். இதற்காகவே ஹைதராபாத்தில் வீடு வாங்கி குடியேறிவிட்டார். என்று செய்திகள் வெளியாயின.
இதையெல்லாம் கேட்டால், வயிறு வலிக்குமளவிற்கு வாய் விட்டு சிரிக்கிறார் இந்த அழகிய இளவரசி மிருனாள்.
‘யார் பாஸ் சொன்னது. ஹைதராபாத்தில் வீடு வாங்கி இருக்கேனா, முடிந்தால் அந்த வீட்டோட அட்ரஸ் என்னன்னு சொல்லுங்களேன் பார்ப்போம். அடுத்து சூர்யா கூட நடிக்கிறேன்னு வேற நியூஸ் பார்த்தேன். சூர்யா எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர் கூட நடிக்க நான் எந்த படத்திலயும் கமிட்டாகல. இப்போதான் ஒரு படம் கமிட்டாகி இருக்கேன். ஆனா அதுக்குள்ளே 3 கோடி சம்பளம் வாங்குறேன்னு வேற கிசுகிசு வந்திருக்கு. இது எல்லாமே சும்மாதான்.’ என்று மளமளவென ஒரே மூச்சில் சரவெடி போல் பேசி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மிருனாள் தாக்கூர்.
#mrunal, #mrunalthakur, #seetharamam, #suriya, #nani, #pricessnoorjahan, #suriya42,