விஜய் – லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் கூட்டணி வைத்ததில் இருந்தே ‘லியோ’ படத்திற்கான எதிர்பார்பு நாளுக்குநாள் எகிறிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது இப்பட த்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கான ஒவர்சீஸ் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவுகிறதாம்.
ஒவர்சீஸ் விநியோகஸ்தரகள் ’லியோ’ படத்தின் ஒவர்சீஸ் உரிமையை 70 முதல் 75 கோடிக்கு கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவுக்கு வெளிநாடுகளில் நல்ல மார்கெட் இருக்கிறது. படம் நன்றாக இருந்தால், சுலபமாக 125 கோடி வரை வசூலிக்கும் அளவுக்கு தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது.
சமீபத்தில் வெளியான மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’. வெளிநாடுகளில் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 169 கோடிகள் வசூல் செய்திருக்கிறதாம்.
இதனால் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ’லியோ’ ஒவர்சீஸ் உரிமையை 90 கோடிக்கு மேல் கேட்டால் கொடுக்கலாம் என தயாரிப்பு தரப்பில் யோசித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
#leo, #vijay, #thalapathy, #thalapathy67, #logeshkanagaraj ,#lcu,#kashmi,r #mysskin, #sanjaydutt, #trisha,
உடல் கேலி பண்ணாதீர்கள். அனிகா சுரேந்திரன் கவலை!
அனிகா சுரேந்திரன் ஏக உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் இப்பொழுது அவரும் மலையாள சினிமாவில் ஹீரோயினாக ப்ரமோஷன் ஆகிவிட்டார். படத்தின் பெயர் ‘ஒ மை டார்லிங்’
‘’5 சுந்தரிகள்’ படத்தில் நடித்த போது, நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். கதை என்ன என்பதே எனக்குத் தெரியாது. டைரக்டர் சொன்னதை அப்படியே நடித்தேன். அடுத்து ‘மா’ என்ற குறும்படத்தில் நடித்தேன். அப்பொழுது கதை பற்றி கொஞ்சம் புரிந்து கொண்டதால் நன்றாக நடிக்க முடிந்தது.
ஆனால் இப்போது ‘ஒ மை டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். இது ஒரு டீன் ஏஜ் காதல் கதை. ஒரு ஹீரோயினாக அறிமுகமாக சரியான கதையாக அமைந்து விட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
ஆனால் எல்லோரும் என்னை குழந்தைத்தனமாக இருக்கிறேன் என்கிறார்கள். எனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அப்படிதான் இருந்தன. அடுத்து நான் ரொம்ப குள்ளம். குட்டிப் பெண்ணாக இருக்கிறேன் என்றெல்லாம் கமெண்ட் அடித்தார்கள். இதனால் நான் மனதளவில் ரொம்பவே காயப்பட்டிருக்கிறேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னைப் பற்றி உடல்கேலி பண்ணுகிறார்கள். சைபர்புல்லிங்காக கமெண்ட்களிலும் கூட கிண்டல் அடிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் அதைப் பற்றி நான் கவலைப்படுவது இல்லை. முன்பின் தெரியாத யாரோ அடிக்கும் அந்த கமெண்ட்களை நான் படிப்பது இல்லை. இப்பொழுது ஹீரோயின்’ என்று சிரிக்கிறார்.
’விஸ்வாசம்’ பட ப்ரமோஷனுக்கு போன போதெல்லாம் என்னை அஜித் சார் மகளா என்றெல்லாம் கூட கேட்டிருக்கிறார்கள். அஜித் சார் ஒரு நாள் கூட தான் ஒரு பெரிய ஸ்டார் என்கிற மாதிரி நடந்து கொண்டது இல்லை. பந்தா கிடையாது. ரொம்ப கனிவாக பேசக்கூடியவர்’ என்று அஜித் புராணம் பாடுகிறார் இந்த புது ஹீரோயின்.
anikasurendran #thala #ajith #ak #yennaiarinthal #gvm #malayalam #ohmydarling #ajithdaughter
ஹீரோக்களை அங்கிள்னு கூப்பிடுவீங்களா – கஸ்தூரி ஆவேசம்!
அவ்வப்போது பரபரப்பைப் பற்ற வைக்கும் கஸ்தூரி தற்போது மீண்டும் மீடியா வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறார்.
இப்போது என்ன பஞ்சாயத்து என்று கேட்கிறீர்களா?
தெலுங்கு தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற ஆங்கராக இருந்த அனசுயா, இப்பொழுது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆனாலும் சில குறும்புத்தனமான ரசிகர்கள் இவரை ‘ஆன்ட்டி’ என்று கமெண்ட் அடித்து கலாய்த்து வருகிறார்கள்.
இந்த நெட்டிசன்களின் தொல்லை தாங்காமல் சைபர் போலீஸில் புகாரும் கொடுத்து பாத்தார் அனசுயா. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இவரை பார்த்து ‘ஆன்ட்டி கோஷம் போட்டப்படி இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில்தான் அனசுயாவுக்கு ஆதரவாக கஸ்தூரி குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கஸ்தூரியிடம் இதுப்பற்றி கேட்டப்போது, ‘’சின்ன குழந்தைகள் ஆன்ட்டி என்று கூப்பிடுவதற்கும். வயதில் பெரிய வாலிபர்கள் கூப்பிடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. நடிகைகளை ஆன்ட்டி என்று கூப்பிடும் நீங்கள் வயதான ஹீரோக்களை அங்கிள் என்று கூப்பிட முடியுமா?
ஆன்ட்டி என்ற வார்த்தைக்கு ஏற்கனவே ஒரு தப்பான அர்த்தத்தை உருவாக்கிவிட்டார்கள். அனசுயாவை விட இரு மடங்கு வயதுள்ள ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்களை அங்கிள் என்று கூப்பிடுங்கள். உங்களால் அது முடியுமா? ஆன்ட்டி என்று கூப்பிட இரண்டு காரணங்கள் இருக்கும். அவர்களுடைய மனதில் தப்பான அசிங்கமான எண்ணங்கள் இருக்கலாம், அல்லது மற்றவர்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கலாம். இந்த விஷயத்தில் நான் அனசுயாவுக்குதான் என் ஆதரவு’ என்று கர்ஜித்திருக்கிறார் கஸ்தூரி.
anasuya #aunty #kasthuri #dontcallmeaunty #tollywood #auntrycontroversy