முழுக்க முழுக்க ஆக்ஷனை கையிலெடுத்திருக்கும் ஏ.கே, ஃபேமிலி சென் டிமெண்டொடு ஆக்ஷனையும் வெளுத்து வாங்கும் விஜய் என இந்த பொங்கலுக்கு தாறுமாறு போட்டி கிளம்பியிருக்கிறது.
இங்குள்ள திரையரங்கு நிலவரம் இன்னும் முழுமையாக தெரியவராத சூழலில், அமெரிக்காவில் யாருடைய படத்திற்கு மவுசு அதிகம் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது.
துணிவு, வாரிசு இந்த இரண்டு படங்களுக்குமான யுஎஸ் ப்ரீமியர் ப்ரீ-சேல்ஸ் கலெக்ஷன் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதுவரையில் வாரிசு 4,328 டாலர்களும், துணிவு 13,774 டாலர்களையும் கல்லா கட்டியிருக்கிறது. ஜனவரி 10 சாயந்திரம் திரையிடப்பட இருக்கும் ப்ரீமியர் காட்சிக்கு இன்னும் அதிக திரைகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ஆக்ஷன் அதிரடி காட்டும் விஜய் ஃபேமிலி சென்டிமெண்ட்டிலும், குட் பாய் ஆக வரும் ஏ.கே. வில்லத்தனத்திலும் களமிறங்கி இருப்பதால், துணிவுக்கு அதிக வரவேற்பு தற்போது நிலவுவதாக தெரிகிறது.
இன்னும் ஒரு வாரம் இருப்பதால் அடுத்தடுத்து வரும் ப்ரமோஷன்களை பொறுத்து நிலவரம் மாறலாம்.
சூர்யாவுக்கு 100 கோடி வியாபாரமா?
‘சாதாரண வெற்றியெல்லாம் வேண்டாம். அர்த்தமுள்ள வெற்றிதான் முக்கியம்’ என முழக்கமிட்டு இருக்கிறார் சூர்யா.
இதன் பின்னணியில் கமர்ஷியல் படங்களின் வெற்றியெல்லாம் எனக்கு பெரிதல்ல என்று மறைமுகமாக இன்றைக்குள்ள கமர்ஷியல் ஹீரோக்களின் ஹிட்களை குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ‘ஜெய்பீம்’ மாதிரியான படங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடிக்கவும் சூர்யா விரும்புகிறாராம்.
இதற்கிடையில் இப்போது ‘சிறுத்தை’ பட இயக்குநர் சிவாவுடன் பெயரிடப்படாத தனது 42-வது படத்தின் ஷூட்டிங்கில் மும்முரமாக இருக்கிறார்.
3டி-யில் 10 மொழிகளில் தயாராக திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தை பான் – வேர்ல்ட் ஃபிலிம்மாக முன்னிறுத்தவும் யோசனை இருக்கிறதாம்.
மகதீரா படம் போன்று ஒரு ப்ரீயட் ஃப்ளாஷ்பேக், தற்போது நடக்கும் பரபர திரைக்கதை என உருவாகி வரும் சூர்யா 42-க்கு எதிர்பார்பு அதிகம் உருவாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இப்படத்தின் ஹிந்தி திரையரங்கு உரிமை பெரும் விலைக்குப் போயிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.
அதாவது இந்தி திரையரங்கு உரிமை உட்பட இதர உரிமைகளைச் சேர்த்து 100 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. டிஜிட்டல், சேட்டிலைட் உரிமைகளும் இதில் அடங்கும்.
மார்ச் மாத இறுதியில் இப்பட ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.