இவ்வளவு வருடங்களாக மீடியாவை நேரில் சந்திக்காமல் விளையாட்டு காட்டிய அஞ்சலி, திடீரென Toxic Relationship-ல் இருந்தேன் என்று வெளிப்படையாக சொல்லியது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாபிக் ஆகியிருக்கிறது.
அஞ்சலி நடித்திருக்கும் ஒரு வெப் சிரீஸின் விளம்பரத்திற்காக மீடியாவுக்கு வரிசையாக கொடுத்த பேட்டியில் நீங்கள் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆமாம் என்று முதல் முறையாக தனது ரிலேஷன்ஷிப்பை பற்றி அஞ்சலி மனம் திறந்திருந்தார்.
இத்தனை வருடங்களாக இதைப் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதற்காகவே மீடியாவை பார்த்தாலே ஓட்டம்பிடித்த அஞ்சலி தாமாக வலிய வந்து தனது ரிலேஷன்ஷிப்பை பற்றி சொல்ல என்ன காரணம் என்று கேட்ட போதுதான் . அதன் பின்னணி பற்றி தெரிய வந்திருக்கிறது.
அஞ்சலியும் இரண்டெழுத்து வெற்றி நடிகரும் ஒருவரையொருவர் விரும்பியது உண்மைதான். மூன்று வருடங்கள் ஜோராக இருந்த காதல், மூன்று வருடங்களுக்கு முன்பாகவே தாறுமாறாக மாறிவிட்டதாம்.
இருவருக்கும் இடையே முட்டிக்கொள்ள, மீடியாவில் இதுபற்றி பேசக்கூடாது என்ற பரஸ்பர புரிதலுடன் விலகிவிட்டார்கள்.
அதனால்தான் இவர்களது ரிலேஷன்ஷிப் பற்றியோ, ப்ரேக் அப் பற்றியோ இதுவரையில் எந்த செய்தியும் கசியவில்லை. அதற்கேற்றால் போல் இவர்கள் இருவரும் மீடியாவை தவிர்த்து வந்தனர்.
இவர்கள் பிரிந்த மூன்று ஆண்டுகளில் முன்னாள் காதலரான இரண்டெழுத்து நடிகருக்கு, தற்போது சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் முன்னாள் டிவி நடிகையின் மீது ஒரு மயக்கம் வந்திருக்கிறதாம். இந்நடிகையின் அழகில் மயங்கிய நடிகர் போஜனம் சாப்பிடும் போது கூட ’வா நீ.. வா நீ…’ என்று கூடவே வைத்து கொண்டிருக்கிறாராம். டிவி கம் சினிமா நடிகையும் நெருக்கம் காட்டி வந்திருக்கிறாராம்.
முன்னாள் காதலரின் இந்நாள் காதலைப் பார்த்து கொஞ்சம் டென்ஷன் வரவே இப்போது அஞ்சலி பழைய கதையைப் பற்றிய ஒரு ஸ்டேட்மெண்ட்டை எடுத்து விட்டிருக்கிறார்.
டென்ஷனில் ”வாரிசு’ தயாரிப்பாளர்!!
தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டிப் பறக்கும் டாப் 10 கமர்ஷியல் ஹீரோகளுக்கு கூட கொடுக்காத அதிக சம்பளத்தை ‘வாரிசு’ மற்றும் வாரிசுடுவுக்காக கொடுத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ.
விஜய்க்கு தமிழ் நாட்டில் இருக்கும் திரையரங்கு விற்பனை, ஒடிடி உரிமை, சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ், டிஜிட்டல் உரிமைகள் என இவற்றை நம்பிதான் 105 கோடி சம்பளம் கொடுத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். விஜய் அரசுக்கு கட்டவேண்டிய ஜிஎஸ்டி-யையும் தயாரிப்பாளரே கட்டிவிட்டாராம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் சம்பளம் 125 கோடியைத் தொடும் என்கிறார்கள்.
கேட்ட சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன். படத்தையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறேன். இங்கே ரிலீஸூக்கான வேலையையும் பார்த்துவிட்டேன். ஆனால் வாரிசுடு படத்தின் ப்ரமோஷனுக்கு இதுவரை விஜயிடமிருந்து எந்தவித பதிலும் இல்லையாம்.
தமிழில் ஒகே. ஆனால் இங்கே விஜய்க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. இந்தப் படம் மூலம் இன்னும் அதிக ரீச் ஆகலாம். அதற்கு அவர் ப்ரமோஷனுக்கு வரவேண்டுமே என்று தில் ராஜூ கொஞ்சம் டல்லடித்தபடி இருக்கிறாராம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பீஸ்ட்’ ரிலீஸின் போது மட்டும் விஜய் பேட்டி கொடுத்தார். இப்பொழுதும் அதைப் போலவே படத்தின் ரிலீஸின் போது ஒரு பேட்டி கொடுப்பார் என்கிறது விஜய் தரப்பு.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்
2022 முடியப் போகிறது. இதனால் இப்பொழுதெல்லாம் டாப் -10 பட்டியல்களை அள்ளி அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சினிமாவுக்கான ப்ரத்யேக டேடாபேஸ் என்று கொண்டாடப்படும் ஐஎம்டிபி இந்தியாவின் டாப் 10 பாப்புலர் படங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் 9 படங்கள் தென்னிந்தியப் படங்கள்தான். ஒரேயொரு ஹிந்திப்படமாக ’த காஷ்மீர் ஃபைல்ஸ்’ மட்டுமே இடம்பிடித்திருந்தது.
இப்பொழுது இண்டர்நெட்டின் நம்பர் ஒன் தேடல் தளமான கூகுளும், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் டாப் – 10 பட்டியலை அதாவது Google’s top ten most searched Indian films in 2022 -ஐ வெளியிட்டு இருக்கிறது.
இந்த பட்டியல் சினிமா ரசிகர்களுக்கான ஐஎம்டிபி லிஸ்ட்டில் இருந்து மாறுப்பட்ட லிஸ்ட்டாக வெளியிடப்பட்டிருக்கிறது.
Google’s top ten most searched Indian films in 2022.-ல் இடம்பெற்றிருக்கும் படங்கள்
1) Brahmastra: Part One – Shiva
2) K.G.F: Chapter 2
3) The Kashmir Files
4) RRR
5) Kantara
6) Pushpa: The Rise
7) Vikram
8) Laal Singh Chaddha
9) Drishyam 2
10) Thor: Love and Thunder
இதில் ஷாக்கான விஷயம் என்னவென்றால் தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படம் இடம்பெறவில்லை. விக்ரம் மட்டுமே 7-வது இடத்தில் இருக்கிறது. 4 இந்திப்படங்கள், 2 கன்னடப்படங்கள், 2 தெலுங்குப்படங்கள், ஒரேயொரு தமிழ்ப்படம் என கூகுள் லிஸ்ட்டில் தமிழ் சினிமாவிற்கு சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது.