பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘ஜவான்’ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் Nayanthara சென்னைக்கும், மும்பைக்கும் பறந்தபடி இருக்கிறார்.
காரணம் அந்த அழகான இரட்டையர்கள்.
முன்பு வயிற்றில் செய்து கொண்ட அறுவைச்சிகிச்சையின் விளைவாக தன்னால் குழந்தைப் பெற்று கொள்ள முடியாது என்பதாலேயே Surrogacy மூலம் குழந்தை பெற்றுகொள்ள நயன்தாரா ஒப்புக்கொண்டார்.
வாடகைத்தாய் மூலம் பெற்றுகொண்டாலும் கூட இரு குழந்தைகளின் மீதும் நயன்தாராவுக்கு ரொம்பவே ப்ரியம். இதனால்தான் ஷூட் முடிந்தால் உடனே குழந்தைகளைச் சந்திக்க வந்துவிடுகிறாராம்.
தற்போது ஷூட்டிங் நேரம் தவிர மற்ற நேரங்களில் மேக்கப் போடுவதையும் நயன் தவிர்த்து வருகிறார். ஏன் இந்த மாற்றம்?
குழந்தைகளைக் கொஞ்சும் போது கெமிக்கல் நிறைந்த மேக்கப் அவர்களுக்கு பிரச்சினையாகி விடக்கூடாது என்பதற்காகதான் இந்த முன்னெச்சரிகை நடவடிக்கையாம்.
’இப்பொழுதுதான் நீ முழுமையடைந்து இருக்கிறாய். உலகில் உன்னை விட சந்தோஷமானவள் வேறு யாருமில்லை. முன்பைவிட இப்பொழுது இன்னும் அழகாய் இருக்கிறாய்.’ என நயன் மேக்கப் இல்லாமல் இருப்பதைப் பார்த்து விக்கி அநியாயத்திற்கு புகழ்ந்து தள்ளுகிறார் என்கிறார்கள்.
ரஜினியுடன் மோதும் சிவ ராஜ்குமார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது.
Jailer படக்குழுவில் அடுத்தடுத்து பல நட்சத்திரங்கள் இணைந்தபடி இருக்கிறார்கள்.
இதில் சிவ ராஜ்குமாரும் [Shiva Rajkumar] அடக்கம். ரஜினிக்கு ப்ரியமான கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்தான் இந்த சிவ ராஜ்குமார். இவர் பல வருடங்களாக கன்னடப் படங்களில் மட்டுமே தீவிரமாக நடித்து வருகிறார். இதுவரையில் வேறெந்த மொழிப் படங்களிலும் நடித்தது இல்லை.
முதல் முறையாக ரஜினியுடன் என்பதால் சிவ ராஜ்குமார் தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஜெயிலர் குழுவிடமிருந்து கசிந்திருக்கும் தகவலின் படி, சிவ ராஜ்குமார் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம்.
ரஜினிக்கும் சிவ ராஜ்குமாருக்கும் இடையே ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இதை பக்கா மாஸ் காட்சிகளாக எடுக்க நெல்சன் டீம் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
விஜய் லோகேஷூக்கு வைத்த செக்!
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அனைவராலும் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்து விஜய் நடிக்கும் படத்தையும் இயக்க இருப்பதால் இவருக்கு இன்னும் மவுசு கூடியிருக்கிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட்டாக LCU என்ற கான்செப்ட்டை லோகேஷ் வட்டாரம் கிளப்பிவிட்டிருக்கிறது.
அயர்ன் மேன், ஸ்பைடர்மேன், டாக்டர். ஸ்ட்ரேஜ், ஹல்க், ப்ளாக் விடோ, ப்ளாக் பேந்தர், தோர் [Ironman, Spiderman, Doctor Strange, Hulk, Black Widow, Black Panther, Thor] என காமிக் கதாபாத்திரங்களை வைத்து படமெடுத்து கல்லா கட்டியதில் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருக்கும் மார்வல் ஸ்டூடியோஸின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் போல் தனது படங்களில் வந்த கதாபாத்திரங்களை மற்ற படங்களுக்குள் பயன்படுத்துவதும் வித்தையைதான் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்த போகிறார் என்கிறார்கள்.
தளபதி 67 [‘Thalapathy 67’] படத்திற்கும் இப்படியொரு கான்செப்ட்டை வைத்து ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து அதை விஜயிடம் லோகேஷ் கூறியதாகவும், ஆனால் விஜய் அதை ரசிக்கவில்லை என்றும் பேச்சு அடிப்படுகிறது.
’நம்ம கதை மட்டும் இருந்தா போதும்’ என்று விஜய் சொல்லியதாகவும் கூறுகிறார்கள்.
பொதுவாகவே ட்ரக்ஸ், ரத்தம், மாஃபியா என இந்த மூன்றையும் வைத்தே கதையை எழுதி வருகிறார் லோகேஷ். மேலும் கொரிய கேங்க்ஸ்டர் படங்களில் இருந்து காட்சிகளை உருவி தன்னுடைய படங்களில் பயன்படுத்துகிறார் என நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் போட்டுத்தாக்குவதால் விஜய் லோகேஷின் ஐடியாவை அப்படியே தவிர்த்துவிட்டதாக கிசுகிசு உலா வருகிறது.