No menu items!

Lionel Messi – தோற்றப் பிறகு பேசியது என்ன?

Lionel Messi – தோற்றப் பிறகு பேசியது என்ன?

முதல் போட்டியிலேயே வலு குறைந்த சவுதி அரேபியாவிடம் தோற்றதால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் அர்ஜென்டினா வீரர்கள். இதனால் போட்டி முடிந்த பிறகு லாக்கர் ரூமுக்கு சென்ற அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருந்திருக்கிறார்கள். அதன் பிறகே தங்கள் ஓட்டல் அறைக்கு திரும்ப பஸ்ஸில் ஏறியிருக்கிறார்கள். அந்த பஸ்ஸிலும் மயான அமைதி நீடிக்க, தனது இருக்கையில் இருந்து எழுந்து பேசத் தொடங்கியிருக்கிறார் மெஸ்ஸி.

“இது நமக்கு பலத்த அடிதான். ஏனென்றால் இதை நாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியின் மூலம் நமக்கு 3 புள்ளிகள் கிடைக்கும். அதிக பரபரப்பில்லாமல் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. எதிர்பாராதது நடந்துவிட்டது. அடுத்து நடக்கவுள்ள விஷயங்களுக்காக நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த போட்டிகளில் நாம் வென்றாக வேண்டும். அது நம்மைச் சார்ந்தே இருக்கிறது.

நாம் கடுமையான அணிகளைக் கொண்ட பிரிவில் இருக்கிறோம். அதனால் முன் எப்போதையும்விட வலிமை கொள்வோம். அடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம்” என்று அப்போது பேசியிருக்கிறார் மெஸ்ஸி. அவரது இந்த வார்த்தைகள் அடுத்த போட்டிகளை எதிர்கொள்ள அர்ஜென்டினா வீரர்களுக்கு புதிய சக்தியைக் கொடுத்துள்ளதாக சக வீரர்கள் சொல்கிறார்கள்.


எங்கே போகிறார் ரொனால்டோ?

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கும் இடையிலான மோதல்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன. பரஸ்பரம் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகவுதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி எந்த கிளப்புக்காக ரொனால்டோ ஆடுவார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

இந்த சூழலில் செல்ஷியா கில அணிக்காக ரொனால்டோ ஆட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. செல்ஷியாவின் புதிய உரிமையாளரான டாட் போலி, ரொனால்டோ கேட்கும் தொகையைக் கொடுத்து தனது கிளப்புக்காக அவரை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ளார். அதேநேரத்தில் மரடோனா முன்பு ஆடிய நெபோலி அணியும் ரொனால்டோவை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த 2 கிளப்களில் எந்த கிளப்பை தேர்ந்தெடுப்பது என்று யோசித்து வருகிறார் ரொனால்டோ.


29.50 லட்சம் டிக்கெட்கள் விற்பனை

இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்காக மொத்தம் 29.50 லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக பிஃபா அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம அதிக டிக்கெட்கள் விற்பனையான உலகக் கோப்பை என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 24 லட்சம் டிக்கெட்கள் விற்றதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு கால்பந்து தொடர்களின் மூலம் பிஃபா அமைப்புக்கு 7.5 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ஜியானி இன்பண்டினோ தெரிவித்துள்ளார். இது எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட 1 பில்லியன் டாலர் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...