பர்பெரி என்ற பெயர் இப்போது வைரலாகிவிட்டது. காரணம் விஜய்.
நேற்று ரசிகர் மன்றத்தினரை தனது பனையூர் வீட்டில் சந்தித்தார் விஜய்.
வாரிசு படம் ரீலீசாவதில் சிக்கல் என்று பேச்சுக்கள் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் ரசிகர்களை விஜய் சந்திப்பது பரபரப்பானது.
பொங்கலுக்குப் படம் ரீலீஸ் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் திடீரென்று ஒரு பிரச்சினையைக் கிளப்பியது. நேரடி தெலுங்குப் படங்கள் மட்டுமே சங்கராந்தி தினத்தில் வெளியாக வேண்டும் வாரிசு தமிழ்ப் படத்துக்கு முன்னுரிமை கிடையாது என்று கூறியது பிரச்சினையானது. இந்தப் பின்னணியில்தான் விஜய் தனது ரசிகர்களை சந்தித்தார்.
பனையூரில் விஜய் ஜாலியாக பேசினார். ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தும் கொடுக்கப்பட்டது.
ஆனால் விஜய் ரசிகர்களை சந்தித்த செய்தியைவிட அவர் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டைதான் சோஷியல் மீடியாவில் வைரலானது.
விஜய் அணிந்திருந்த சட்டையின் பிராண்டின் பெயர் பர்பெரி.
சர்வதேச அளவில் மிக காஸ்ட்லியான பிராண்ட் இது.
இந்த பர்பெரி இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம்.
இந்த கம்பெனி தொடங்கப்பட்ட வருடத்தைக் கேட்டால் அதிர்ச்சியாவீர்கள். 1856ல் பர்பெரி நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 166 வருடங்கள் கடந்தும் உலகின் மிக முக்கியமான பிரண்டாக இருக்கிறது.
பர்பெரி சட்டை, பேண்ட் மட்டுமல்ல ஃபேஷன் சம்பந்தமான அனைத்துப் பொருட்களையும் தயாரிக்கிறது.
ஆனால், சாமானியர்கள் யாரும் இந்த பிராண்ட் பக்கம் போக முடியாது.
நேற்று விஜய் அணிந்த வெள்ளை சட்டை 32 ஆயிரம் ரூபாய் என்று கூறுகிறார்கள்.
பர்பெரியில் குறைந்த விலை பொருட்கள் என்ன என்று தேடினால் ஒரு டீ ஷர்ட்டைக் காட்டுகிறது வெப்சைட்.
அந்த குறைந்த விலை 5ஆயிரம் ரூபாய்.
சட்டைகளில் குறைந்த விலை டிஸ்கவுண்ட் போய் 7 ஆயிரம் ரூபாய்.
விஜய் அவர் வசதிக்கு ஏற்ப 32 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அணிந்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சமந்தாவும் பர்பெரியுடன் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
பர்பெரி பிராண்டின் டூ பீஸ் உடையணிந்து போஸ் கொடுக்க அந்தப் படம் வைரலானது.
இந்தியா முழுவதும் நடை பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி அணிவது பர்பெரி டீ ஷர்டுகள். அதுவும் சர்ச்சையானது.
இத்தனை காஸ்ட்லியான டீ ஷர்ட்டுகளை அவர் அணியலாமா என்ற கேள்வியை பாரதிய ஜனதா கட்சியினர் கேட்டார்கள்.
மோடி அணியும் உடைகளின் பட்டியலை காங்கிரஸ்காரர்கள் எடுத்துப் போட்டார்கள். சமீபத்தில் குஜராத் சென்ற பிரதமர் மோடி ஒரே நாளில் நான்கு விதவிதமான உடைகளில் தோன்றினார். இத்தனை உடைகள் அணிவதற்கு ஒரு பர்பெரி டீ ஷர்ட் பரவாயில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் திருப்பி அடித்தார்கள்.