No menu items!

மரியாதை உங்களைத் தேடிவர வேண்டுமா?

மரியாதை உங்களைத் தேடிவர வேண்டுமா?

நாம் பிறர் மதிக்கும்படி வாழவேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை. ஆபீஸ், வீடு என்று எந்த இடமாக இருந்தாலும், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை மதிக்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த மரியாதையை மிரட்டியோ, காசு கொடுத்தோ வாங்க முடியாது. நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துதான் நமக்கு மரியாதை கிடைக்கும்.

அப்படி நம் மீது பிறருக்கு மரியாதை வர நாம் முக்கியமாக 5 விஷயங்களை செய்யவேண்டும். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்…

1.நேரத்தை மதிக்க தெரிந்துகொள்ளுங்கள்:

மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டுமானால் , அதாற்கு முதல் படியாக நாம் நமது நேரத்தை மதிக்க வேண்டும். உதாரணமாக ஆபிஸ் அல்லது வீட்டில் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை முடித்த பிறகே மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முடிப்பதற்கான பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கும்போது, மற்றவர்களிடம் பேசவோ, அவர்கள் போனில் அனுப்பும் செய்திகளை பார்க்கவோ செய்யாதீர்கள். அப்போதுதான் நேரத்துக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பு அவர்களுக்கு புரியும். அது உங்கள் மீது அவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

2.தெளிவாக, தைரியமாக பேசுங்கள்:

பேச்சு என்பது நம் எண்ணங்களின், சிந்தனைகளின் வெளிப்பாடு. மற்றவர்கள் நம்மை அதிகம் மதிக்க இது ஒரு முக்கிய காரணமாகிறது. பேச்சில் உண்மையும் தெளிவும் தைரியமும் இருந்தால் நாம் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். அது நம் மீதான மரியாதையை அதிகரிக்கும்.

3.கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்:

நாம் எப்படி வாழ வேண்டும் என்பது பற்றிய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள் வாழுங்கள். நீங்கள் உங்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதன்படி வாழ்பவராக இருந்தால் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்படும். உதாரணமாக நீங்கள் புகைபிடிக்கூடாது என்ற கொள்கை உடையவராக இருந்தால், மற்றவர்கள் என்னதான் கட்டாயப்படுத்தினாலும் புகை பிடிக்காதீர்கள். மாறாக, அவர்கள் கட்டாயப்படுத்தி நீங்கள் புகை பிடித்தால், உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தமாகிவிடும்.

4.தைரியத்தை கைவிடாதீர்கள்:

வாழ்க்கையில் எந்த கட்டத்திலும் தைரியத்தை கைவிடக்கூடாது. எதை கண்டும் பயப்படாமல் பிரச்சினைகளை நேரடியாஅக எதிர்கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்க அதுவும் ஒரு முக்கிய காரணியாகும்.

5.உங்களை நீங்களே மதியுங்கள்:

உங்கள் பார்வையில் நீங்கள் அதிகம் மதிக்கும் மனிதர்களை சற்று கவனித்து பாருங்கள். அவர்கள் மீது அவர்கள் வைக்கும் மரியாதையை அது தெளிவாகக் காட்டும். முதலில் நம்மை நாமே மதித்தால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்பதை புரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...