No menu items!

எச்சரிக்கை: பெருகும் சைபர் குற்றங்கள் – தடுக்க முடியுமா?

எச்சரிக்கை: பெருகும் சைபர் குற்றங்கள் – தடுக்க முடியுமா?

கலவரங்களைத் தூண்டும் வகையிலான செய்திகளையும், பொய்களையும் பரப்புவது சமூக வலைதளங்களில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பின் போது இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்பியதால் அப்பள்ளியில் கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல முதல்வரின் துபாய் பயணத்தின்போது அவர் அணிந்திருந்த கோட்டின் விலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்தியும் அந்த நேரத்தில் பெரிய பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

நடிகர்களின் ரசிகர்கள் போடும் ஆபாசச் சண்டைகள், அவதூறு செய்திகளைப் பரப்பும் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் என்று சமூக வலைதளங்களை பலரும் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். சட்ட ஒழுங்கையும் இது அதிக அளவில் பாதிக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (National Crime Records Bureau) ஆய்வின்படி இந்தியா முழுவதிலும் 52,974 குற்றங்கள் நடந்துள்ளன.

இந்த குற்றங்களில் தெலங்கானா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இங்கு 10,303 சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. 8,829 சைபர் குற்றங்களுடன் உத்தரப் பிரதேசம் 2-வது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் தமிழகம் 10-வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 2021-ம் ஆண்டில் 1,076 இணைய வழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த வரிசையில் தமிழகம் 10-வது இடத்தில் இருப்பது ஓரளவுக்கு நிம்மதியைத் தந்தாலும், கடந்த 2019-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளது சற்று அதிர்ச்சி அளிக்கிறது.

‘சமூக வலைதளங்களில் இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும், சமூக ஊடக குழு தொடங்கப்படும்’ என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

இக்குழுவில் சென்னை மற்றும் 8 மாநகரங்களிலிருந்தும் 37 மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 203 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இக்குழு செயல்படும்.

“இக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அதிகாரிகள் அனைவரும் கணினி அறிவியலிலும், சைபர் தடய அறிவியலிலும் தேர்ச்சி பெற்றவர்கள். இணைய வழியில் ஏற்படும் பாலியல் குற்றங்கள், பண மோசடி, மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோரை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இந்த குழு துரிதம் காட்டும். மேலும் பொய் செய்திகளை இணையத்தில் இருந்து நீக்கும்’ எனவும் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அரசும் அதிகாரிகளும் பல முன்னெடுப்பு நடவடிக்கை எடுக்கும் இந்த நிலையில் மக்களாகிய நாமும் பொய் செய்திகளை ஷேர் செய்வது, லைக் செய்வது, அதை ஆதரிப்பது போல கமண்ட் செய்வது ஆகிவற்றை தவிற்கலாம். மேலும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து சரியான செய்திகளை பகிர்வது நல்லது. இதன்மூலம் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதுடன், தவறான செய்திகளைப் பரப்பியதற்காக தண்டனை பெறுவதில் இருந்தும் தப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...