இந்தியாவில் 6 லட்சம் குடும்பங்களை சந்தித்து National Family Health Survey என்ற தேசிய குடும்ப சுகாதார கருத்துக் கணிப்பை மத்திய சுகாதாரத் துறை மிகப் பெரிய சர்வேயை எடுத்துள்ளது. அதன் முடிவுகள் வெளி வரத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் ஆண், பெண்களின் பாலியல் பங்காளிகள் குறித்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இந்திய சமூகத்தில் பாதுகாப்பான பாலியல் உறவு நடக்கிறதா? ஆணுறைகளை பயன்படுத்துகிறார்களா? கருத்தடை சாதனங்களை உபயோகிக்கிறார்களா? என்பதை குறித்தெல்லாம் அறிய இந்த புள்ளிவிவரம் எடுக்கப்பட்டிடுக்கிறது. National Family Health Survey – தேசிய குடும்ப சுகாதார கருத்துக் கணிப்பு 2019 முதல் 2021 வரை எடுக்கப்பட்டது.
திருமணமாகாத இந்திய ஆண்களும் பெண்களும் செக்ஸை எப்படி அணுகுகிறார்கள் என்பது குறித்த புள்ளிவிவரம் இப்போது வெளி வந்திருக்கிறது. இந்தியா முழுவதிலும் 707 மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த வருடத்தில் திருமணமாகாத ஆண்களில் 13.4 சதவீதத்தினர் உடலுறுவு கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருமணமாகாத பெண்களில் 2 சதவீதத்தினர்தான் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
23 – 24 வயதில் இருக்கும் திருமணமாகாத ஆண், பெண்களின் செக்ஸ் குறித்தும் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வயதினரில் உள்ள ஆண்களில் 77 சதவீதத்தினர் உடலுறவு இதுவரை கொண்டதில்லை. அவர்களுக்கு அந்த அனுபவமே இல்லை.
இந்த வயதில் உள்ள பெண்களில் 95.3 சதவீதத்தினருக்கு செக்ஸ் அனுபவம் இல்லை என்பது இந்த புள்ளிவிவரத்தில் தெரிய வந்திருக்கிறது.
20லிருந்து 24 வயதுக்குள் இருக்கும் திருமணமாகாத ஆண்களில் 11.8 சதவீதத்தினருக்கு மட்டுமே செக்ஸ் அனுபவம் இருக்கிறது. இந்த வயது பெண்களில் 1.9 சதவீதத்தினருக்கு மட்டுமே செக்ஸ் அனுபவம் உண்டு.
15லிருந்து 19 வயதுக்குள் இருக்கும் திருமணமாகாத ஆண்களில் 4.4 சதவீதத்தினர் கடந்த வருடத்தில் செக்ஸ் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இந்த வயதில் உள்ள பெண்களில் 1.3 சதவீதத்தினரே தாங்கள் செக்ஸில் ஈடுபட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
திருமணமாகாத ஆண்களில் 64 சதவீதத்தினரும் பெண்களில் 65 சதவீத்தத்தினரும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
15லிருந்து 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 97 சதவீதத்தினர் கன்னித் தன்மையை இழக்காமல் உள்ளார்கள். ஆண்களில் இந்த வயதுப் பிரிவில் 93.8 சதவீதத்தினர் கன்னித் தன்மையுடன் உள்ளார்கள்.