இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் அதற்கு மறுபெயராக அடையாளம் காணப்பட்டவர் இயக்குநர் ஷங்கர்.
பதினைந்து வருடங்களுக்கு மேல் பிரம்மாண்ட பிரம்மா என்ற பெயரை தக்க வைத்து கொண்டிருந்த ஷங்கருக்கு, இப்போது நெருக்கடி அதிகரித்து இருக்கிறது. ராஜமெளலியின் அடுத்தடுத்த மூன்றுப் படங்களும் பிரம்மாண்டத்தின் மறுபக்கத்தை இதுவரை இல்லாத வகையில் காட்டியிருக்கின்றன.
இதனால் ஷங்கர் தரப்பு கொஞ்சம் அதிர்ந்துப் போயிருப்பது என்னவோ உண்மைதான். கையிலிருக்கும் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படம் அடுத்து கமலுடன் இணையும் ‘இந்தியன் -2’ படத்திற்கு பிறகு தனது ’மாத்தி யோசி’ பாணியை கையிலெடுக்க ஷங்கர் திட்டமிட்டு வருகிறாராம்.
அதாவது சமூகம் தொடர்பான சீரியஸான கதைக்களத்தில், ஃபேண்டஸி சமாச்சாரங்களைப் புகுத்துவதுதான் ஷங்கர் ட்ரேட்மார்க். ஆனால் இந்த முறை ஃபேண்டஸி கதையை கையிலெடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அதாவது பாகுபலி பாணியில் வரலாற்று புனைவு கதையை கையிலெடுத்து, பிரம்மாண்டத்தை காட்ட திட்டமிட்டு இருக்கிறாராம்.
முன்பு சுஜாதா இருந்தார். ஆனால் தற்போது யாரை நம்புவது என்று யோசித்த ஷங்கருக்கு கைக்கொடுக்க முன்வந்திருப்பவர் எழுத்தாளரும் எம்பியுமான மு. வெங்கடேசன்.
எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமென்றால், சு. வெங்கடேசன் மிக விரைவில் வரலாற்று புனைவுக்கதையை ஆரம்பிக்க இருக்கிறாராம்.
ஹீரோயின் சப்ஜெக்ட்டா அலறும் கீர்த்தி ஷெட்டி!
பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டிக்கு கதை சொல்ல கோலிவுட்டில் காத்திருக்கும் இயக்குநர்கள் வரிசை கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு கொண்டிருக்கிறது.
ஆனால் பாலா முடியாமல் வேறு படங்களில் கமிட்டாக முடியாமல், தன்னிடம் கதை சொல்ல தேடி வருபவர்களை ஆர்.ஏ.சி. பட்டியலில் வைத்திருக்கிறார்.
கதை கேட்பதற்கு முன்பாகவே அவர் தனது கால்ஷீட் மேனேஜரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறாராம்.
அது என்னவென்றால், கதை சொல்ல வருபவர்கள், தயவு செய்து ஹீரோயினை மையப்படுத்திய சீரியஸான கதைகள் எதுவும் வேண்டாம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமென்றால், அதில் எனக்கு பொறுப்பு அதிகம் இருக்கும். அது இப்போதைக்கு எனக்கு சரிப்பட்டு வராது. அதனால் இன்னும் கொஞ்சநாட்கள் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்க கூடிய கமர்ஷியல் படங்களில் நடிக்கவே விரும்புறேன். அதனால் அந்த மாதிரியான கதைகள் வைத்திருப்பவர்களை முதலில் சந்திக்கலாம்’ என்று கீர்த்தி ஷெட்டி சொல்வதாக அவருக்கு நெருங்கிய வட்டாராம் கிசுகிசுக்கிறது.
பாலா படம் வந்தப் பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் சினிமாவில் என்ன இடம் இருக்கும் என்பதை பார்த்துவிட்டு கதை சொல்லலாம் என்று இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.
கமலை பின்னுக்கு தள்ளிய கார்த்தி!
கோலிவுட்டில் இன்றைய நிலவரப்படி செம கெத்தாக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான்.
மூன்றே படங்களில் முன்னணி தமிழ் இயக்குநர்களை தன்னைப் பார்த்து பொறாமைப் பட வைத்திருக்கிறார். காரணம் அடுத்தடுத்து இவர் இயக்கவிருக்கும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள்.
இன்று லோகேஷின் ’ரெடி ஆக்ஷன்’ என்ற் குரலுக்காக தயாராக இருப்பவர்கள் கமல், விஜய், மற்றும் கார்த்தி. இதிலும் யாருடைய படம் முதலில் தொடங்கப்படும். யாருக்கு இரண்டாவதுப் படம். மூன்றாவது படமாக பண்ண காத்திருக்கப் போவது யார் என்ற கேள்விகள்தான் இப்போது உதவி இயக்குநர்கள் மத்தியில் பரபரப்பான விவாதப் பொருளாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜூக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால் முதலில் விஜய் 67 என்பது உறுதியாகி விட்டது. இரண்டாவது யார் என்பதுதான் இப்போதைய போட்டி. இந்த போட்டியில் முந்தப்போவது கமலா இல்லை கார்த்தியா என்ற கேள்விக்கு ஏறக்குறைய பதில் கிடைத்துவிட்டது.
விஜய்67 முடித்த கையோடு, அடுத்து கார்த்தி நடிக்கும் கைதி-2 படத்தைதான் லோகேஷ் இயக்கவிருக்கிறாராம். இப்படத்தை வெகு சீக்கிரமாக முடிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
கைதி-2 படத்தை விரைவாக முடித்ததும், ஒரு சிறிய ப்ரேக். அதன் பின் கமலின் விக்ரம்-2 படத்தின் வேலைகள் தொடங்கும் என்கிறார்கள்.
இதனால் இந்த போட்டியில் விக்ரமை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்திருக்கிறார் கைதி.