No menu items!

நியூஸ் அப்டேட்: போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை –  முதல்வர் மு.க. ஸ்டாலின்

நியூஸ் அப்டேட்: போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை –  முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதை பொருட்கள் உள்ளது. இது சமுதாயத்தின்-நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது. எனவே, முதன் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கூட்டம் கூட்டி உள்ளோம். போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தாக வேண்டும்.

போதை பொருள் பயன்படுத்துபவர்களை போதையின் பாதையில் செல்லாமல் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே, இதற்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட மகாராஷ்ராவை விட தமிழ்நாட்டில் குறைவுதான் என்று சொல்வதில் நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.

போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதி போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம். அதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை (11-ந்தேதி) பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

ஜிப்மர் மருத்துவமனை செவிலியர்கள் வேலை வாய்ப்பில் தமிழகம், புதுச்சேரி புறக்கணிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், செவிலியர் காலிப்பணியிடங்களுக்காக 2022 ஜூலை 13-ந் தேதியிட்ட வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பின்படி 139 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது. அதன்படி 21.07.22 முதல் 11.08.22 அன்று வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், 28.07.22ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செவிலியர்கள் தேர்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்து உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக இணைக்கும் படி ஒன்றிய அரசை வலியுறுத்துகின்றேன்” என்று கூறியுள்ளார்.

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளாது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் 3ஆம் தேதி பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் 2 மாதங்கள் இடைவெளியில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த முறை மிதமான அறிகுறிகளே இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியிருந்தார். தற்போது தொற்றின் நிலவரம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.

அஞ்சல் துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு: தபால் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்

அரசு சார்பில் முன்மொழியப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக  இன்று (10-08-2022) வேலைநிறுத்தம் நடத்தப்படும்  என்று தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தபால் துறையில் உள்ள 4.5 லட்சம் ஊழியர்களில் சுமார் 60% பேர் ஆகஸ்ட் 10-ம் தேதி, அஞ்சல் துறையின் பல்வேறு பிரிவுகளின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அஞ்சல் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஆண்கள் அனைவரும் 2 திருமணம் செய்துகொள்ள வேண்டும்: எரித்திரியாவில் புதிய சட்டம்

ஆப்பிரிக்கா கண்டத்தில் செங்கடலையொட்டி உள்ள சிறிய நாடு எரித்திரியா. உள்நாட்டு போர் மற்றும் அண்டை நாடுகளுடன் போர் என்று அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஆண்கள் 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்துகொண்டாலும், அது குற்றமாக கருதப்படமாட்டாது.  கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது. அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...