No menu items!

வாவ் எதிர்காலம்: உதயநிதி ஸ்டாலின் எதிர்காலம் எப்படி இருக்கு?

வாவ் எதிர்காலம்: உதயநிதி ஸ்டாலின் எதிர்காலம் எப்படி இருக்கு?

வார ராசிபலன் மே 23 – மே 29

ஜோதிடர் DR. N. ஞானரதம் M. A. , PH. D. ,

செல் +91 93810 90389

மேஷம்: மதிப்பும் மரியாதையும் கூடும்.

பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். அவருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். இது வரை சொந்த-பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் தாங்கி கொண்டிருந்த நீங்கள் தற்போது அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 29

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை


ரிசபம்: உதயநிதி ஸ்டாலின் ராசி

கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் வாரம். தன்னம்பிக்கை பிறக்கும். பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். உயர் பதவி கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் உயர்வு உண்டு. வசதி வாய்ப்புகள் அதிகமிருந்து பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம் அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 25, 27

அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, பச்சை


மிதுனம்: வருமானம் உயரும்.

எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். ஆனால், பல் வலி வந்துபோகும். தொண்டை புகைச்சல் அதிகமாகும். கட்சித் தலைமையுடனான மோதல்கள் விலகும். புகழ்பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 26

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை


கடகம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். பங்குதாரராக இருந்தால் லாபம் அதிகம் பெறுவீர்கள். உறவுகாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட தேதிகள்: 25, 28

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்ச்


சிம்மம்: காதலர்கள் கவனம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தாமதப்பட்டு வந்தடையும். பெண்கள் தங்க நகை வாங்க ஆரம்பிப்பர். வெளிநாட்டில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். காதலர்கள் எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீரகள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 27, 29

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்ச், மஞ்சள்


கன்னி: விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும் என்றாலும் வீண் சந்தேகத்தாலும் ஈகோ பிரச்னையாலும் கணவன் – மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 25

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்


துலாம்: வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம்

வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 26, 28

அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, சிவப்பு


விருச்சிகம்: முயற்சிகள் வெற்றி அடையும்

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களின் போது கவனம் தேவை. அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகம் சாதகமாக இருக்கும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 24, 27

அதிர்ஷ்ட நிறங்கள்: கடல்நீலம், பச்சை


தனுசு: அலைச்சல் அதிகமாகும்

பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வங்கி லோன் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். கௌரவப் பதவி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 27, 29

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை


மகரம்: ஆனந்தம் குடிகொள்ளும்

அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் ஆனந்தம் குடிகொள்ளும். வயதானவர்கள் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நிலையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 28

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கிரே


கும்பம்: ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளவும்

உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலமாக பணம் வரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 25, 29

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், ஊதா


மீனம்: உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்

சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் நகை விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 23, 25

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்ச், சிவப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...