No menu items!

வாவ் எதிர்காலம்: சிவகார்த்திகேயன் எதிர்காலம் எப்படி இருக்கு?

வாவ் எதிர்காலம்: சிவகார்த்திகேயன் எதிர்காலம் எப்படி இருக்கு?

வார ராசி பலன் மே 16 – மே 22

ஜோதிடர் DR. N.ஞானரதம் M.A., PH.D.,

செல் +91 9381090389

மேஷம் – கலைஞர்கள் பாராட்டு பெறுவர்

மூத்த சகோதரரால் நன்மை விளையும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.

மாணவர்கள் கூடா நட்பை விலக்குவர். மருத்துவர்கள் சாதனை படைப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட தேதிகள் 16, 18

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்:  சிவப்பு, வெள்ளை


ரிஷபம் – நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும்

பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும்.

பழைய கடன் தீரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். மனம் அமைதியைத் தேடும். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள் 19, 21

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்:  கடல்நீலம், பச்சை


மிதுனம் – மாணவர்களின் தேவை பூர்த்தியாகும்  

அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் அதிபர்கள் முதலீட்டை அதிகரிப்பர். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். இரவு நேர பயணத்தின்போது அதிக கவனம் தேவை.

புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். எதிர்காலத்திற்கென சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள் 16, 19

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்:  வெள்ளை, பச்சை


கடகம் – நடிகர் சிவகார்த்திகேயன் ராசி

கலைஞர்களின் கனவு நனவாகும்.  வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும்.   சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். புதிய சொத்து வாங்குவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 20, 22

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்:  வெள்ளை, ஆரஞ்ச்


சிம்மம் – காதல் கண் சிமிட்டும்

சிலருக்கு காதல் கண்சிமிட்டும். விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும்.

தாங்கள் விரும்பிய துறையில் மிளிருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில்லாதவர் விரும்பிய வேலையில் அமர்வர். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட தேதிகள் 17, 19

அதிர்ஷ்ட நிறங்கள் ஆரஞ்ச், மஞ்சள்


கன்னி – எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்

வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள். பிள்ளையின் திருமண விழா வெற்றி பெறும். நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர்  மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. இனிமையான சம்பவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள் 19, 20

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்:  வெள்ளை, மஞ்சள்


துலாம் – தம்பதிகளிடையே அன்பு கூடும்

பணவரவில் பங்கம் இல்லை. அரசியல்வாதிகளின்  புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும். பெண்களுக்கு அறியாமை விலகும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். உடல் நலம் மேம்படும். வெளி நபர்களிடம் எச்சரிக்கை  தேவை.

அதிர்ஷ்ட தேதிகள் 17, 19

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: மஞ்சள், வெள்ளை


விருச்சிகம் – காதலர்கள் ஒன்று சேருவர்

எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றி தொடரும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். தாயின் உடல் நலம் சீரடையும். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேருவர்.

ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள் 16, 22

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்:  நீலம், கிரே


தனுசு – புதிய வாய்ப்புகள் கிடைக்கும்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிஷன் கிட்டும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.

கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரி இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார். குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் மிகும்.

அதிர்ஷ்ட தேதிகள் 18, 20

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: நீலம், ஊதா


மகரம் – சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள். வீட்டில் உள்ளவர்கள் அடிபணிவர். ஊதிய உயர்வினைப் பெறுவர். பெற்றோர் தக்க சமயத்தில் உதவுவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். 

அதிர்ஷ்ட தேதிகள் 17, 21

அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்: கிரே, பச்சை


கும்பம் – வழக்கு சாதகமாகும்

வழக்கு சாதகமாகும். பழைய கடனை பைசல் செய்ய மாற்றுவழி பிறக்கும். தம்பதிகள் வருவாயில் திட்டமிட்டு செயல்படுவர். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தை பிடிப்பார்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பங்குச் சந்தை மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்ட தேதிகள் 19, 22

அதிர்ஷ்ட நிறங்கள் நீலம், பச்சை


மீனம் –  வாகனத்தை மாற்றுவீர்கள்

வெகு நாட்களாக குழந்தை இல்லாதோர்க்கு பிள்ளை யோகம்  உண்டாகும். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நெடுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த காரியம் சாதகமாகும். தொலை தூர புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள்.    

அதிர்ஷ்ட தேதிகள் 16, 19

அதிர்ஷ்ட நிறங்கள் ஆரஞ்ச், சிவப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...