No menu items!

பேரறிவாளன் விடுதலை – முதல்வர் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை – முதல்வர் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்றைக்கு உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது. மாநிலத்தினுடைய உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

மாநில அரசின் கொள்கையில், அவர்களது முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதியரசர்கள் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமான ஒன்று. மாநில சுயாட்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்திருக்கக் கூடிய மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவோம். தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் இருந்து ஹர்திக் படேல் விலகல்

குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல், அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற தலைவர் ஹர்திக் படேல். கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி முன்னிலையில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாநில கட்சிப் பிரிவின் செயல் தலைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஹர்திக் படேல் இன்று அறிவித்துள்ளார். மாநில காங்கிரஸ் கட்சியின் எந்தக் கூட்டத்திற்கும் தனக்கு அழைப்பு இல்லை என்றும், முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தன்னிடம் ஆலோசனை கேட்பதில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.

256 உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரண்

உக்ரைனுக்கு எதிரான போரில் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அந்நகரில் உள்ள உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைன் ஈடுபட்டு வரும் நிலையில், 256 வீரர்கள் சரணடைந்துவிட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதில் 51 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ரஷிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு – அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் 6 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, “தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. மழை காரணமாக கடந்த 2 நாட்களாக மின் நுகர்வு குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதை தடுத்து உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு அளிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...