விராத் கோலியின் வியாபார மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1,412 கோடி ரூபாய். இந்தியாவிலேயே முதலிடம்.
தனி மனிதர்களின் வணிக மதிப்புகளை டஃப் அண்ட் பெல்ப்ஸ் (Duff & Phelps) நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து 5-வது ஆண்டாக விராத் கோலி முதலிடம் பிடித்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரபலங்களுக்கு விளம்பர சந்தையில் உள்ள மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இத்தனை கோடி ரூபாயா என்று இதைப் பார்த்து நாம் மலைத்துப் போய் நிற்கலாம். ஆனால் கோலி கவலைப்படுவார். காரணம், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கோலியின் சந்தை மதிப்பு 52 மில்லியன் டாலர் குறைந்திருப்பதே அதற்கு காரணம். அதாவது சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மதிப்பு குறைந்திருக்கிறது.
கோலிக்கு வருத்தம் ஆனால் இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு மகிழ்ச்சி. காரணம் கடந்த ஆண்டில் 3-வது இடத்தில் இருந்த அவர், இந்த ஆண்டில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரது விளம்பர சந்தை மதிப்பு ரூ.1,202 கோடி. இந்த பட்டியலில் ரூ.1,060 கோடி மதிப்புடன் அக்ஷய் குமார் 3-வது இடத்தில் உள்ளார்.
முழுக்க முழுக்க ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த பட்டியலில் இரண்டு பெண்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ஆலியா பட். ரூ.517 கோடி விளம்பர மதிப்பு கொண்ட அவர், இப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார். இதிலுள்ள மற்றொரு பெண் தீபிகா படுகோன். அவரது விளம்பர சந்தை மதிப்பு ரூ.392 கோடி.
இனி அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்
இவர்கள்தாம்:
- விராத் கோலி : ரூ .1,412 கோடி
- ரண்வீர் சிங் : ரூ.1,202 கோடி
- அக்ஷய் குமார் : 1,060 கோடி
- ஆலியா பட் : ரூ.517.3 கோடி
- தோனி : ரூ.464 கோடி
- அமிதாப் பச்சன் : ரூ.411 கோடி
- தீபிகா படுகோன் : ரூ.392 கோடி
- சல்மான் கான் : ரூ.392 கோடி
- ஆயுஷ்மான் குரானா : ரூ.374 கோடி
- ஹ்ருதிக் ரோஷன் : ரூ.368 கோடி