No menu items!

ஹர்த்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? – ரோஹித் சர்மா விளக்கம்

ஹர்த்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? – ரோஹித் சர்மா விளக்கம்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அணித்தேர்வு குறித்த சில விளக்கங்களை கேப்டன் ரோஹித் சர்மாவும், தேர்வுக்குழு தலைவர் அகர்கரும் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது செய்தியாளர்கலின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த விளக்கம்

டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடிவரும் ரிங்கு சிங்கை டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்காதது ஏன்?

தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர்: இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணித் தேர்வில் நாங்கள் எடுத்த கடினமான முடிவு என்று இதைச் சொல்லலாம். ரிங்கு சிங்கோ, சுப்மான் கில்லோ எந்த தவறையும் செய்யவில்லை. இந்த தொடரில் ரிங்கு சிங் இடம்பெறாததற்கு அவரது தவறு ஏதும் காரணம் அல்ல. இந்த உலகக் கோப்பைக்கான அணியின் காம்பினேஷனில் அவர் செட் ஆகாத்தால் அணியில் சேர்க்க முடியவில்லை.

இந்த உலகக் கோப்பைக்கான அணியில் கூடுதலாக 2 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்று கேப்டன் ரோஹித் சர்மா விரும்பினார். அதோடு 2 விக்கெட் கீப்பர்களும் தேவைப்பட்டார்கள். அதன்படி அணியை தேர்வு செய்யவேண்டி இருந்ததால் ரிங்கு சிங்கை அணியில் சேர்க்க முடியவில்லை. இந்திய அணியில் தேர்வு செய்யாவிட்டாலும், ரிசர்வ் வீர்ர்களில் ஒருவராக அவரை தேர்வு செய்துல்ளோம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உங்களை நீக்கிவிட்டு ஹர்த்திக் பாண்டியாவை நியமித்துள்ளார்களே?

ரோஹித் சர்மா: வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். வாழ்க்கை எப்போதுமே உங்களுக்கு சாதகமாக மட்டும் இருந்துவிடாது. இதற்கு முன்பும்கூட நான் பல கேப்டன்களின் கீழ் ஆடியிருக்கிறேன். இன்னொரு கேப்டனின் கீழ் ஆடுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஹர்த்திக் பாண்டியாவின் கீழ் ஆடுவது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

இந்த ஐபிஎல்லில் ஹர்த்திக் பாண்டியா தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். அப்படி இருந்தும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்ட்ராக ஹர்த்திக் பாண்டியாவை எப்படி சேர்த்தீர்கள்?

அகர்கர்: ஒரு பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் அணிக்கு தேவையான சமநிலையை ஹர்த்திக் பாண்டியா கொண்டுவருவார் என்று நம்புகிறோம். இப்போதைய நிலையில் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக அவருக்கு மாற்று யாரும் இல்லை. அணியில் அவர் இருந்தால் ஹர்த்திக் பாண்டியாவுக்கு பல ஆப்ஷன்கள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முன் எப்போதும் இல்லாத அளவில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டது ஏன்?

ரோஹித் சர்மா: இதற்கு சில தொழில்நுட்ப காரணங்கள் இருக்கின்றன. அங்குள்ள மைதானங்களில் ஏற்கெனவே ஆடியுள்ள அனுபவத்தை வைத்து இந்த அணியை தேர்வு செய்துள்ளோம். அதற்கான காரணத்தை இப்போது விளக்கமாக சொல்ல முடியாது. அமெரிக்காவில் நாம் ஆடும் அனைத்து போட்டிகளும் அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகின்றன. அதனால் பனி இருக்குமோ என்று பயப்பட தேவையில்லை. இப்போது நாங்கள் எடுத்துள்ள 4 சுழற்பந்து வீச்சாளர்களில் 2 பேர் ஆல்ரவுண்டர்கள். ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணியைப் பொறுத்து அவர்களை பயன்படுத்துவோம்.

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறதே?

அகர்கர்: இதைப்பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இந்த ஐபிஎல்லில் விராட் கோலி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது ஃபார்ம் அற்புதமாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவரது இடத்தை மற்றவர்களால் நிரப்ப முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில், ஐபிஎல் கிரிக்கெட்டில் வீர்ர்களின் ஃபார்ம் முக்கியமாக கருதப்பட்டதா?

ரோஹித் சர்மா: இந்த உலகக் கோப்பைக்கான அணியில் 70 சதவீதத்தை இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பே தீர்மானித்துவிட்டோம். ஒரு சில இடங்கள் மட்டுமே ஐபிஎல் கிரிக்கெட்டில் வீர்ர்களின் ஆட்டத்தை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...