’அரசியல் ஆர்வம் இருக்கு, ஆனா அது எப்போ நடக்கும்னு தெரியல’ என்று சொல்லிக்கொண்டிருந்த விஜய், இப்போது, அரசியலில் களம் காண ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கிவிட்டார்.
’த.வெ,க’-வைத் தொடங்கியவர் இன்னும் தனது கொள்கைகளைச் சொல்லவில்லை. அதேபோல் வருகிற மக்களவைத் தேர்தலையும் சந்திக்கப் போவது இல்லை என்று உறுதியாக கூறிவிட்டார்.
அரசியல் களத்தில் யாரையும் இப்போதைக்கு பகைத்து கொள்ள விஜய் விரும்பவில்லையாம். வருகிற மக்களவைத் தேர்தலில் கூட யாருக்கும் ஆதரவான நிலைப்பாடு எடுக்க திட்டமில்லையாம்.
முடிந்தவரை இங்கு மாநில அரசையோ, மத்திய அரசையோ பற்றிய தனது கருத்தை வாய்ஸ் ஆகவோ அல்லது அறிக்கையாகவோ வெளியிடும் எண்ணமும் இல்லையாம். முடிந்த வரை இந்த தேர்தலில் தனது பெயர் எதுவும் அடிப்படாமல் இருந்தால் போதும் என விஜய் நினைக்கிறாராம்.
அதற்கு அவர் இந்தியாவிலேயே இருக்கக்கூடாது என்று அவருக்கு நெருங்கிய ஐஏஎஸ் வட்டார நண்பர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்களாம்.
இதனால் என்ன செய்வது என்று யோசித்த விஜய், பட்டென்று ஒரு மாஸ்டர் ப்ளானை போட்டுவிட்டாராம்.
இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து கொண்டிருக்கும் ‘கோட’ பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஷெட்யூல் முடிந்ததும் வெளிநாட்டில் எடுக்க வேண்டிய காட்சிகளும் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை எடுக்க இருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாதக்காலம் ஷூட்டிங் இருக்குமாம். இதைதான் இப்போது கையிலெடுத்து இருக்கிறார் விஜய் என்கிறார்கள்.
அதாவது மார்ச் மற்றும் ஏப்ரலில் ரஷ்யாவின் தட்பவெப்பம் நாம் தாங்கிக் கொள்கிற மாதிரி இருக்கும். மார்ச் மாத இறுதியில் ரஷ்யாவுக்குப் போய்விட்டால், மீண்டும் திரும்புவதற்குள் தேர்தல் முடிவடைந்துவிடும். இதன் மூலம் அரசியல் பஞ்சாயத்திற்குள் இப்போதைக்கு மாட்டிக் கொள்ள வேண்டிய அவசியமிருக்காது,
இதனால் மார்ச் ஏப்ரலில் ரஷ்யாவில் ஷூட்டிங் இருக்கும்படி பார்த்துகொள்ள ஓகே சொல்லிவிட்டாராம்.
இதனால் கோட் படக்குழுவினர் லொகேஷன் பார்த்து, ஷூட்டிங் செய்வதற்கான ஒப்புதல் வாங்கும் வேலைகளுக்காக இப்போதே ரஷ்யா கிளம்பிச் சென்றுவிட்டதாம்.