No menu items!

சூர்யாவையும் விட்டு வைக்காத பாலா

சூர்யாவையும் விட்டு வைக்காத பாலா

மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது பாலாவின் அதிரடி செயல்.

அதாவது ‘வணங்கான்’ படத்தின் ஆரம்பத்தில் பாலாவும் சூர்யாவும் பெரும் ஆர்வத்துடன் மீண்டும் கைக்கோர்க்கிறோம் என்று களமிறங்கினார்கள். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவிருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சினிமாவின் மமிதா பைஜூ.

இந்தப் படத்தில் நடித்தது பற்றி மமிதா பைஜூ ஒரு மலையாள சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதுதான் இப்போது பரபரப்பாகி இருக்கிறது.

’கொட்டு அடிப்பது போல ஒரு காட்சி இருந்துச்சு. கையால டமடமன்னுன் தட்டணும். தட்டிகிட்டே ஆடணும். அதை எப்படி அடிக்கிறதுன்னு அப்பதான் அடிச்சு பார்த்துட்டு இருந்தேன். ஆனா டைரக்டர் அதைப் பண்ணி காட்டுன்னு சொன்னார். நான் தயாரா இல்ல. அதனால எனக்கு பதட்டாமாகிடுச்சு.

பின்னால் இருந்த அவர் என் தோள்பட்டையில் அடிச்சார்.’

அடுத்து அவர், ‘நான் அப்பப்ப திட்டுவேன். அதை பெரிசா எடுத்துக்காதீங்கன்னு அவரே சொன்னார். சில நேரங்கள்ல அடிச்சும் இருக்கார்’

சூர்யாவும் அவரும் சேர்ந்து படம் பண்ணியிருந்ததால அது எனக்கு மட்டும்தான் புதுசா இருந்துச்சு’ என்று மமிதா கூறியிருக்கிறார். இந்த பஞ்சாயத்துதான் அவர் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலக காரணம் என்று இப்போது தெரியவந்திருக்கிறது.

இது போன்ற பஞ்சாயத்து மமிதா பைஜூவுக்கு மட்டுமில்லை. சூர்யாவுக்கும் வேறுவிதமாக நடந்ததாம். அதனால்தான் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு உண்டானதாக ’வணங்கான்’ படத்தில் ஆரம்பத்தில் வேலைப்பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

கன்னியாகுமரி பகுதிகளில் கொஞ்ச நாட்கள் ஷூட்டிங் நடந்தது. சூர்யாவும் ஆரம்பத்தில் பாலாவுடன் உற்சாகமாகதான் ஸ்பாட்டில் இருந்தார்.

ஆனால் ஷூட்டிங் போக போக பாலா பழைய மாதிரி ஸ்பாட்டிலேயே பேச ஆரம்பிக்க, இது சூர்யாவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

’நந்தா’ படம் மூலம் பாலாவும் சூர்யாவும் ஒன்றிணைந்தார்கள், அடுத்து ‘பிதாமகன்’. இந்த இரண்டுப் படங்களும் வெளிவந்த காலக்கட்டத்தில் சூர்யா இப்போது உள்ளது போல் கமர்ஷியல் ஹீரோவாக இல்லை. வளர்ந்து வரும் கமர்ஷியல் ஹீரோவாகதான் இருந்தார்.

அப்பொழுது பாலா சூர்யாவிடம் உரிமையோடு வா… போ.. என்றோ வாடா என்றோ கூப்பிடுவது வழக்கம்.

’பிதாமகன்’ பெரும் வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா, விக்ரம் இருவருக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யா நடிப்பிலும் அசத்தும் ஒரு கமர்ஷியல் ஹீரோ என்ற பெயரைப் பெற்றார். இதனால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.

சூர்யா அடுத்தடுத்து வியாபார ரீதியிலான படங்களில் நடிக்க ஆரம்பித்ததால், பாலாவும் சூர்யாவும் மீண்டும் இணையவில்லை. அந்த குறையைப் போக்கும் விதமாகதான் ‘வணங்கான்’ படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்தார் சூர்யா.

பொதுவாகவே பாலாவின் படங்களினால் போட்ட முதலீடுக்கு ஏற்ற வசூல் வருமோ வராதோ என்ற ஒரு சந்தேக இருந்தாலும், விமர்சன ரீதியாக நல்ல பெயரை வாங்கிவிடல் என்பதால்தான் படமெடுக்கவே முன்வருவார்கள். இதுவும் சூர்யாவுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், தனக்கு ஒரு நடிகனாக பெயர் வாங்கிக்கொடுத்தத்தில் பாலாவின் பங்கு அதிகம் என்பதால்தான் ‘வணங்கான்’ படத்தைத் தயாரிக்க சூர்யா முன்வந்தார்.

இப்படி ஆரம்பித்த ப்ராஜெக்ட்டில் பாலா ஆரம்பத்திலேயே திட்டமிட்டப்படி காட்சிகளை எடுக்கவில்லையாம். ஒரு நாளைக்கு ஒரு காட்சி. அதிகப்பட்சம் போனால் இரண்டு காட்சிகளைத்தான் ஷூட் செய்தாராம்.

இப்படியே போனால் திட்டமிட்ட நாட்களில் படத்தை முடிக்க முடியாது. அடுத்து பட்ஜெட் எகிறிவிடும், இந்த பிரச்சினை இருந்தாலும் அதை சூர்யா ஆரம்பத்தில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையாம். பாலாவும் அதை தவறாக எடுத்து கொள்ளவில்லை. காரணம் பாலாவின் ஃப்லிம் மேக்கிங் பாணி அப்படிதான். ஒவ்வொரு ஃப்ரேம்மிலும் நேர்த்தியை எதிர்பார்ப்பார்.

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலா, சூர்யாவை பழைய நினைப்பிலேயே வா.. போ.. என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறாராம். இதனால் தர்மசங்கடத்திற்கு உள்ளானாராம் சூர்யா. இதை வெளியே சொல்லவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் சூர்யா இருந்திருக்கிறாராம்.

இது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகவே, ஷூட்டிங்கை பேக்கப் செய்யுமளவிற்கு போய்விட்டதாம். இருவருக்கும் இடையே லேசான உரசல் உண்டானாதாம். இதன் அடிப்படையில்தான் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு என்று செய்தி ஒன்று வெளியானது.

ஆனாலும் இருவரும் எதையும் வெளிக்காட்டவில்லை. சில வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடர்ந்தது.

இந்த ஷூட்டிங்கின் போதுதான், பாலா சூர்யா மீது கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார் என்கிறார்கள்.
ஷூட்டிங்கின் போது இருவரும் பழைய மாதிரி பேசிக்கொள்ளவில்லை என்றாலும் உரசல் இருந்தது.

ஒரு மலையில் சூர்யா ஏறும் காட்சி ஒன்றை ஷூட் செய்ய வேண்டியிருந்ததாம். இந்த காட்சியை எடுக்கும் போதுதான் இருவருக்கும் இடையே பிரச்சினை உருவானதாம். வியர்க்க விறுவிறுக்க ஓடி ஏறிய சூர்யாவிடம் ரீடேக் வாங்கிக்கொண்டே இருந்தாராம் பாலா.

டேக் நன்றாகதானே வந்திருக்கிறது என்று மானிட்டரை பார்த்து சூர்யா சொல்ல, பாலா சொல்றதை செய் என்பது போல இருந்திருக்கிறார். இதைப் பார்த்த யூனிட் ஆட்களுக்கும் ஏதோ விவகாரம் போலிருக்கிறது என்று தெரிய வந்ததாம்.

ஓடி ஓடி ஓய்ந்து போன சூர்யா ஸ்பாட்டிலிருந்து போனவர்தான். திரும்பி வரவே இல்லை. ‘வணங்கான்’ படத்திலிருந்து மனம் இசைந்து இருவரும் விலகுவதாக தெரிவித்தார்கள்.

சூர்யாவுக்கு இப்படியென்றால் மமிதா எம்மாத்திரம் என்கிறது கோலிவுட்.

அடிப்பது என்பதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை சினிமாவில் அதிகம் பார்க்க முடியும். அதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...