No menu items!

விஜய் VS சஞ்சய் தத் – Leo Shooting

விஜய் VS சஞ்சய் தத் – Leo Shooting

’லியோ’ டீம் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.

காஷ்மீர் போய் வந்தததில் களைத்துப் போயிருந்த டீம். அடுத்து சஞ்சய் தத் கால்ஷீட். த்ரிஷா ’பொன்னியின் செல்வன் 2’ ப்ரமோஷனுக்கு போக வேண்டிய கட்டாயம். அடுத்து விஜய் அப்பா – அம்மாவுக்கு 50-வது திருமண நாள் இப்படி பல விஷயங்கள் இருந்ததால்,. மே 1-ம் தேதி ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார்கள்.

இந்த ஷெட்யூல் சென்னையில் நடைபெற இருக்கிறது. ஒரு மாதம் வரை இடைவிடாமல் ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் விஜய், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இருக்கிறார்கள். மேலும் சஞ்சய் தத் நடிக்கவிருக்கும் காட்சிகளையும் எடுக்க இருக்கிறார்கள். விஜய், சஞ்சய் தத் இருவரும் சண்டையிடும் காட்சியை இங்கே எடுக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

லியோவில் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் இருந்தாலும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் சஞ்சய் தத்.

சென்னை ஷெட்யூல் முடிந்த பிறகு ஹைதராபாத் பறக்க இருக்கிறது லியோ டீம்.


சூர்யாவுக்கு டபுள் ரோல் – வெற்றிமாறன் ஸ்பெஷல்

சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியின் ‘வாடிவாசல்’ ஒரு வழியாக உறுதியாகி விட்டது.
சூர்யா ‘கங்குவா’ படத்தை முடிக்கவேண்டும். மறுபக்கம் வெற்றிமாறன் ’விடுதலை 2’ படத்தை ரிலீஸ் செய்யவேண்டும். அதன் பிறகு ‘வாடிவாசல்’ தொடங்கும் என்கிறார்கள்.

வாடிவாசல் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் இப்போது கசிந்திருக்கின்றன.

சூர்யாவுக்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள். அப்பாவும் அவரே. மகனும் அவரே. தமிழர் வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுதான் கதையின் களம்.

இதனால் படத்தில் சூர்யா காளைகளை அடக்கும் காட்சிகள் அதிகமிருக்கிறது. இதற்காகவே சூர்யா காளையை அடக்குவதற்கான பயிற்சியில் கடந்த இரண்டு வருடமாக மும்முரமாக இருக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

சூர்யா காளையை அடக்கும் பயிற்சி மற்றும் வாடிவாசல் டெஸ்ட் ஷூட் இவை இரண்டுக்கு மட்டும் இதுவரையில் 1.50 கோடி செலவாகி இருக்கிறதாம். மேலும் ஜல்லிக்கட்டு காட்சிகள் யதார்த்தமாக இருக்கவேண்டும். அதேநேரம் கொஞ்சம் ரிஸ்க்கும் இருப்பதால், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சமாச்சாரங்களுக்கும் அதிக வேலை இருக்குமாம். இதனால் லண்டனில் இருக்கும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஸ்டூடியோ ஒன்றுடன் வெற்றிமாறன் பேசி வருகிறார்.


பூஜா ஹெக்டே கொடுக்கும் ஸ்கின் டிப்ஸ்!

நடிகைகளுக்கு முதலீடே அவர்களது அழகுதான். இதனால் தங்களது சருமத்தை, கூந்தலை, உடலை ரொம்பவே அக்கறையுடன் கவனித்து கொள்வார்கள். முகம் ரொம்பவே முக்கியம்.

அந்த வகையில் பூஜா ஹெக்டே ரொம்பவே உஷார் பேர்வழி. பெரும்பாலும் கெமிக்கல் நிறைந்த காஸ்மெட்டிக் சமாச்சாரங்களைத் தவிர்த்துவிடுவார். முடிந்த வரையில் இயற்கை முறையில் சருமத்தைப் பராமரிப்பதாக கூறுகிறார்.

பூஜா ஹெக்டே காலையில் எழுந்ததும், தயிரில் மஞ்சளைக் கலந்து முகத்தில் ஒரு மாஸ்க் போல் போட்டு கொள்கிறார். 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை அதை முகத்தில் ஊற வைத்தபின்பு கழுவிவிடவேண்டும். நாள் முழுவதும் உங்கள் முகம் ஜொலிக்கும் என்கிறார்.

இந்த ஃபேஸ் மாஸ்க் வெளிப்புற பராமரிப்புக்கு மட்டுமே. அதனால் உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து கொள்வதால், முகம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது பூஜா சொல்லும் சூப்பர் ரகசியம்.

பொதுவாகவே ஹீரோயின்கள் கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை அதிகம் எடுத்து கொள்ளமாட்டார்கள். உடல் எடை அதிகரித்துவிடும் என்ற பயம்தான் அதற்கு காரணம்.

ஆனால் கார்போ ஹைட்ரேட்டை தவிர்த்துவிட்டால், முகம் ஜொலிக்காதாம் என்கிறார்கள். சருமம் பளபளப்பாக இருக்காதாம்.

எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால், கழுத்து, கைகள், தோள்கள் மீது சன் ஸ்கிரீன் தடவிக்கொண்டுதான் வெளியே போகவேண்டும் என்கிறார் பூஜா ஹெக்டே. இப்படி சன் ஸ்கிரீன் தடவிக்கொள்வதால் சருமம் உலர்ந்து போவதைத் தடுக்கலாமாம்.

மஞ்சளும் தயிரும் செம காம்பினேஷன் என்றால் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...