No menu items!

விஜய் 69 – வெற்றி மாறனா.. த்ரிவிக்ரமா?

விஜய் 69 – வெற்றி மாறனா.. த்ரிவிக்ரமா?

விஜய் அரசியலுக்கு வருவதால் தனது 69-வது படத்துடன், சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். தற்காலிக ஓய்வு என்று சொல்ல காரணம் அவர் மீண்டும் சினிமாவிற்கு வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதனால் விஜயின் 69-வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கிறது.

’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தனய்யா, விஜயின் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இப்படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளம் கூட கொடுக்க தயார் என்று அவர் சொல்லியதாகவும், வெற்றி மாறன் இயக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

வெற்றி மாறன் – விஜய் கூட்டணி என்றதுமே ஒரு கோலிவுட்டில் பல யூகங்கள். இந்நிலையில் விஜயின் 69-வது பட த்தை தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.

விஜய் அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாக நடிக்கும் கடைசிப் படம் ஒரு பக்கா அரசியல் படமாக இருக்கவேண்டுமென நினைக்கிறாராம். இதன் மூலம் மக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் என்ற ஒரு இமேஜ் உருவாகும் என எதிர்பார்க்கிறாராம்.

இந்நிலையில்தான் சமீபத்தில் மகேஷ் பாபுவை வைத்து ‘குண்டூர் காரம்’ படத்தை இயக்கிய த்ரிவிக்ரம், விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். இது ஒரு பக்காவான அரசியல் கதையாம். விஜய்க்கு இந்த கதையும் பிடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்த கூட்டணி உறுதியானால், 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க ஹரிகா & ஹாசினி நிறுவனம் தயாராக இருக்கிறதாம்.

இதனால் வெற்றி மாறனா அல்லது த்ரிவிக்ரமா என்பதை விஜய்தான் முடிவு செய்யவேண்டும் என்பதால் இதற்கு விடை தெரிய இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.


கவின் பண்ணும் கலாட்டா

இன்றைய தேதியில் சிவகார்த்திகேயனுக்குப் போட்டி கவின் என்று ஒரு புதுக்கதையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு ப்ளஸ், காதலும், நகைச்சுவையும் கலந்த கதைகள்தான். ஆனால் அவரோ இப்போது விஜய் அஜித்துக்கு போட்டியாக ஆக்‌ஷன் படங்களில் இறங்கிவிட்டார். இதனால் கவினுக்குதான் இனி இளசுகள் வட்டாரம் என்று யாரோ வேண்டுமென்றே கொளுத்தி போட்டபடி இருக்கிறார்கள்.

இது கவினுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது வெகு சீக்கிரமே தெரிந்துவிடும்.

ஸ்டார், கிஸ், நெல்சன் தயாரிக்கும் படம் அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் என இப்போது கவின் கைவசம் 4 படங்கள் இருக்கின்றன. இதில் மூன்று படங்கள் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கின்றன.

இப்படி பரபரப்பாக போகும் கவின், அடுத்து சுந்தர் சி இயக்கவிருக்கும் ‘கலகலப்பு 3’-ல் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் விமல், அஞ்சலி, ஒவியா, சிவா நடித்த கலகலப்பு 2012-ல் வெளியானது. இந்தப் படம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்தை எடுத்தார்கள். அதில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படமும் வெற்றி.

இதனால்தான் ‘கலகலப்பு 3’-க்கு சுந்தர் சி தயாராகி இருக்கிறார். இதில் கவின் நடிக்கிறார் என்று கிசுகிசு கிளம்பியதுமே, கவின் சம்பளத்தை ஏற்ற இருக்கிறார் என்று மற்றொரு கிசுகிசுவும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற ஆடி போனஸ் போல கிளம்பியது.

ஆனால் சுந்தர் சி தரப்பில் ’கலகலப்பு’ மூன்றாம் பாகம் எடுக்க இருப்பது உண்மைதான். ஆனால் கவினிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது

ஆனால் ஒன்றும் இல்லாமல் விஷயம் கசியுமா என்ற கேள்விக்கு பதிலாக, ‘கவின் கால்ஷீட்டுக்கு ரொம்ப கறாராக இருக்கிறார். சம்பளம் அதிகம் கேட்கிறார்’ என்றும் சொல்கிறார்கள்.

வாய்ப்பு இருக்கும் போதுதான் காசு பார்க்க முடியும். அதற்காக கரகம் எடுத்து ஆடக்கூடாது என்று கோலிவுட்டின் அனுபவசாலிகள் முணுமுணுக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...