No menu items!

Vegan Diet Zhanna Samsonova மரணம் – டாக்டர் விளக்குகிறார்

Vegan Diet Zhanna Samsonova மரணம் – டாக்டர் விளக்குகிறார்

உலகளவில் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களில் ஒருவர் ஜானா சாம்சோநோவா. ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா ‘வீகன்’ உணவு முறையை, குறிப்பாக சமைக்காத பச்சை காய்கறிகளை மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தார். இதை பிரச்சாரமும் செய்து வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று முன் தினம் (1-8-2023) ஜானா மரணமடைந்தார். 39 வயதே ஆகியுள்ள ஜானா மரணத்துக்கு அவர் வீகன் உணவு முறையை பின்பற்றி வந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. வீகன் டயட் என்பது என்ன? அதன் ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன? டயட்டீசியன் டாப்னியை கேட்டோம்.

“காலரா போன்ற நோயால் ஜானா இறந்திருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால், நீண்ட காலம் அவர் பட்டினியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே அவர் சோஷியல் மீடியாவில் பிரபலமாகியுள்ளார். நிறைய பேர் அவரை ஃபாலோ செய்கிறார்கள். இப்போது ஜானா மரணம், அவரை பின்பற்றிய அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

‘வீகன்’ உணவு முறை பிரச்சினையில்லை. அதை ஜானா மிக தீவரமாக ஒரு வெறியுடன் செய்துவந்ததுதான் பிரச்சினையாகியுள்ளது. கடந்த 7 வருடங்களாக ஜானா பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் இருந்துள்ளார். அதற்குப் பதிலாக பழச்சாறு குடித்து வந்துள்ளார். பழச்சாறு மூலம் அவருக்கு கொஞ்சம் நீர்ச்சத்து கிடைத்திருக்கும். என்றாலும், ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அவசியம்.

வழக்கமான சைவ உணவுப் பழக்கத்தோடு சேர்த்து பால், `டயரி’ பொருள்கள் என்று அழைக்கப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் உணவுமுறையே வீகன் உணவுமுறை. `பால் சம்பந்தப்பட்ட பொருள்கள், முட்டை, இறைச்சி ஆகியவற்றைத் தவிர்த்து சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதால் உடல்நலமும் ஆரோக்கியமும் கூடும்’ என்பது இவர்கள் நம்பிக்கை.  

உடல் பருமன், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு போன்றவை இன்று உலகம் முழுவதும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனால் இள வயது மரணங்கள்கூட அதிகரித்துள்ளன. இந்நிலையில், வீகன் உணவு முறை இவற்றை வரவிடாமல் தடுக்கும் என்பது ‘வீகன்’ உணவு முறையை பின்பற்றுவோர் வாதம். ஆனால், இதை ஆதரிக்கும் அறிவியல்பூர்வமான ஆதாரங்களோ, ஆராய்ச்சி முடிவுகளோ இதுவரை இல்லை.

வீகன் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது கொலஸ்ட்ரால் (cholestrol) இருப்பவர்களுக்கு நல்லதுதான். ஆனால், இதில் தவிர்க்கப்படும் இறைச்சி, பால் சம்பந்தப்பட்ட பொருள்களால் உடலுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை வேறு உணவுகளின் மூலம் சமன் செய்ய வேண்டும். குறிப்பாக கால்சியம், பி-12, புரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துகளை வேறு உணவுகளை உட்கொண்டு சமன் செய்வது மிகவும் அவசியம். இல்லையென்றால் இவை குறைபாட்டால் வரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

புதியதாக எந்த உணவு முறையை பின்பற்றுவதாக இருந்தாலும், முறையாக ஓர் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று, சமச்சீரான உணவு முறையை பின்பற்றுவதே நல்லது. கூகிளில் பார்த்தோ, சோஷியல் மீடியா பார்த்தோ முடிவெடுப்பது சரியல்ல” என்றார் டாக்டர் டாப்னி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...