No menu items!

விஜய்68-ல் விஜய்க்கு என்ன கதாபாத்திரம்?

விஜய்68-ல் விஜய்க்கு என்ன கதாபாத்திரம்?

ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு, குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு செல்வது விஜயின் வழக்கம்.

இப்போது ‘லியோ’ பட ஷூட்டிங் முடிந்திருப்பதால், வெளிநாட்டுக்குப் பறந்திருக்கிறார் விஜய்.

விஜய் மீண்டும் சென்னை வந்ததும், அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கவிருக்கும் இப்படம் விஜய்க்கு 68-வது படம். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25-வது தயாரிப்பாகவும் இருக்கும். இதனால் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

விஜய்க்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் நன்றாக இருப்பதால், தைரியத்துடன் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முன்வந்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் விஜயை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வெங்கட்பிரபு காண்பிக்க இருக்கிறார் என்பது குறித்து இப்போது பல யூகங்கள்.

அரசியல் சார்ந்து அரசியல், லஞ்சம், ஊழல் தொடர்பான விஷயங்களில் விஜய் எப்படி இருப்பார் என்பதை காண்பிக்கும் விதமாக, அவரது கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.

தற்போது நிலவும் கிசுகிசுவின் அடிப்படையில், வெங்கட் பிரபு விஜய்யை ஒரு சிபிஐ அதிகாரியாக காட்ட இருப்பதாக தெரிகிறது. குற்ற வழக்குகளை விசாரிக்கும் குழுவை தலைமையேற்று வழிநடத்தும் நேர்மையான அதிகாரியாக விஜய் இருப்பார் எனவும், ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளை களையெடுக்கும் ஒரு ஹீரோவாக விஜயை காட்ட இருப்பதாக கூறுகிறார்கள்.


அதிதி ஷங்கரின் ஆசை!!

வாரிசு அரசியல் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெறும் நெபொடிசம் பற்றி பாலிவுட்டில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவிலும் அதே நிலை இருந்தாலும், அது பற்றி யாரும் பெரிதாக கருத்து சொல்வதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.

ஆனால் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க வரும் போது சில சலசலப்புகள் கிளம்பி அடங்கின.

ஆனால் அதிதியோ, ‘எனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகள் எதுவுமே என்னுடைய அப்பாவை வைத்து வரவில்லை. எனக்கு எது பொருத்தமா இருக்குமோ அந்த மாதிரி கதாபாத்திரத்தோடுதான் வர்றாங்க. நான்தான் கதை கேட்குறேன். எனக்குப் பிடிச்சிருந்தா, அப்புறம் அப்பாகிட்ட அந்த கதையைச் சொல்லுவேன். அப்படி வந்த வாய்ப்புதான் இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்த இயக்கப்போகும் படம்.

எனக்கு அப்பாவோட படத்துல நடிக்க ஆசை. ஆனா அது நடக்குமான்னு தெரியல. மத்தப்படி ‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கராஜன், ’திருச்சிற்றம்பலம்’ எடுத்த மித்ரன் இயக்கத்துல ஒரு படம் நடிக்கணும். இப்படி ஒரு குட்டி பட்டியல் இருக்கு.

நடிப்பை தவிர்த்து சினிமாவுல பாடணும், ஒரு மியூசிக் ஆல்பம் போடணும். இதுதான் ஆசை. டைரக்‌ஷனெல்லாம் எனக்கு செட் ஆகாது. நமக்கு எது வருமோ அதை ஒழுங்கா பண்ணிட்டு போயிடணும்’ என்கிறார் அதிதி ஷங்கர்.


’புஷ்பா – 2’ படத்தில் விஜய் சேதுபதி??

சூப்பர் ஸ்டார் என்கிற போட்டி இங்கே களைக்கட்டி கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இணையத்தில் டிஜிட்டல் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வசூலில் யார் மன்னன் என்றும் இன்னொரு பக்கம் ரசிகர்களிடையே சினிமாஉலக யுத்தம் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த களேபரங்கள் எதையும் விஜய் சேதுபதி கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.

’உப்பண்ணா’ படம் மூலம் தெலுங்குப் பக்கம் சென்றார். அடுத்து சிரஞ்சீவி படத்திலும் நடித்தார். இதனால் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே தெரிந்த முகமாகி இருக்கிறார்.

அடுத்து விஜய் சேதுபதி எந்தப்பக்கமும் தலையைக் காட்டாமல், பாலிவுட் பக்கம் .போனார். ஹிந்திப்படத்திலும் நடித்து வருகிறார். ஹிந்தி வெப் சிரீஸிலும் நடித்துவிட்டார்.

இப்படி தெலுங்கு, ஹிந்திப்பக்கம் தமிழில் இருந்து அழைக்கப்படும் நடிகராக தனது சினிமா மவுசை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை, கோவிட்டின் போது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடக்கிறதாம்.

முதல் பாகத்தில் பஹத் பாசில் நடித்த கதாபாத்திரத்தை விட அதிரிபுதிரியான போலீஸாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...