No menu items!

உஷ்…பேசாதிங்க! உங்களுக்கு இது நல்லது!

உஷ்…பேசாதிங்க! உங்களுக்கு இது நல்லது!

வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்றால் எப்போதும் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் அறிவுரை. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது ஒருவர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் அமைதியாக இருக்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அப்படி ஒருவர் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் அமைதியாக இருந்தால், மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் பல நல்ல மாற்றங்கள் வருவதாக இந்த ஆய்வு சொல்கிறது.

சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 6,000 முறை பல்வேறு விஷயங்களைப் பற்றி மனிதன் சிந்திக்கிறான் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தினமும் நம்முடைய உடல் கழிவுகளை வெளியேற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்களை தூக்கி வீசுவதும்!.

உடலளவில் இருக்கும் பிரச்சினைகளைக் கூட சரிசெய்து விடலாம். ஆனால், மனதளவில் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்சினைகளையும் சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல. உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் மூளையோடு தொடர்பு கொண்டவை. தேவையில்லாத விஷயங்களை யோசித்து மூளையை சோர்வடைய செய்தால் நாளாக நாளாக மூளை சோர்வடைந்து சாதாரணமாக செய்யும் செயல்களைக் கூட நம்மால் செய்ய முடியாது.

ஒரு மணிநேரம் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் இன்னும் தேவையில்லாத எண்ணங்கள் தானே வரும் என்று நீங்கள் கேட்கலாம். நாள் முழுவதும் தேவையில்லாத எண்ணங்களை யோசித்துக் கொண்டு இருப்பது வேறு, நமக்கு ஏற்படும் எண்ணங்களை கவனிப்பது வேறு. ஏன் இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன, அதற்கான காரணங்களை கண்டறிவது மிகவும் முக்கியம் அதற்காக இந்த ஒரு மணிநேரத்தை பயன்படுத்துங்கள்.

மனதளவில் ஏற்படும் நன்மைகள்:

தினமும் ஒரு மணிநேரம் அமைதியாக இருப்பதன் மூலம், முதலில் உங்களுடைய மன அழுத்தம் குறையும். தேவையில்லாத எண்ணங்கள்தான் நாளடைவில் மன அழுத்தமாக மாறுகிறது. எண்ணங்களை சீர்படுத்த இந்த ஒரு மணிநேரத்தை பயன்படுத்துங்கள்.

“உடலளவில் ஏற்படும் நன்மைகள்:

ஒரு மணிநேரம் அமைதியாக இருப்பது இரத்த அழுத்தத்ததையும் குறைக்கும். இரத்த அழுத்தம் என்பது இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் கேள்விப்பட்ட ஒன்றுதான். மேலும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

படைப்பாற்றலை மேம்படுத்தலாம்:

கலைத்துறையில் உள்ளவர்கள், எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் படைப்புகள் எல்லாம் தனிமையில் அமைதியாக இருக்கும்போதுதான் தோன்றியிருக்கிறது. “இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்” என்று சொல்லப்படுகிற நடன இயக்குநர், பிரபு தேவா “தனிமையில்தான் நான் எப்பொழுதும் பயிற்சி செய்வேன் என்று கூறியுள்ளார். அவரின் ஏராளமான ஐகானிக் ஸ்டெப்ஸ் எல்லாம் அவர் அமைதியாக தனிமையில் இருக்கும்போது தான் தோன்றியாதாம்!

ஒரு மணிநேரம் அமைதியாக, உங்களுடைய எண்ணங்களை நீங்கள் கவனிக்கும்போது உங்களையே நீங்கள் அதிகமாக புரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

எல்லாவற்றுருக்கும் மேலாக இன்றைய பரபரப்பான வாழ்க்கை சுழலில் பெரும்பாலும் தூக்கமின்மை நோயால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மணிநேரம் அமைதியாக இருப்பதன் மூலம் தூக்கமின்மை நோயையும் சரி செய்யலாம்.

ஒரு மணிநேரம் அமைதியாக இருப்பதால், பெரிதாக என்ன மாறிவிடும் என்று சிலர் நினைக்கலாம்!.

ஏதோ ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அமைதியாக தியானம் செய்பவர்களை தான் யோகிகள், கடவுளுடன் நேரடியாக பேசும் தன்மையை பெற்றவர்கள் என்றெல்லாம் சொல்லி நாம் க்யூவில் நின்றுக்கொண்டிருக்றோம்.

அப்படி க்யூவில் நின்றுக்கொண்டு, யாரோ உங்களைப் பற்றி சொல்வதை நம்புவதற்கு பதிலாக, உங்கள் ஆழ்மனது உங்களிடம் சொல்ல விரும்புவதை காது கொடுத்து கவனியுங்கள்!

அந்த ஒரு மணிநேரத்தில், உங்கள் எண்ணங்களைதான் கவனிக்க வேண்டும் என்பதில்லை. தியானம் முறையில் கூட அந்த ஒரு மணிநேரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நம்மை நாம் புரிந்துக்கொள்வது தான் வாழ்க்கையில் சவாலான ஒன்று. அந்த ஒரு மணிநேரத்தை அதற்காக பயன்படுத்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...